Pakistan captain Babar Azam Tamil New: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தி வருபவர் நட்சத்திர வீரர் பாபர் அசாம். அந்நாட்டு தேசிய அணிக்காக 2015ம் ஆண்டு அறிமுகமான இவர், 2020ம் ஆண்டிலே கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். டெஸ்ட் போட்டியில் அவரது சராசரி 43.18 ஆகவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது சராசரி 56.93 மற்றும் 45.17 ஆகவும் உள்ளது. அவரது டி20 போட்டிகளின் ஸ்ட்ரைக் ரேட் சராசரி 129.13 ஆகவும், ஒருநாள் போட்டிகளுக்கான ஸ்ட்ரைக் ரேட் சராசரி 89.57 ஆகவும் இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 73 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 2620 ரன்களை குவித்து ஐசிசி டி20 தரவரிசையில் 805 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதேபோல், 83 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 3985 ரன்களை குவித்து ஐசிசி ஒருநாள் போட்டி வீரர்களுக்கான தரவரிசையில் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 811 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 791 புள்ளிகளுடன் கேப்டன் ரோகித் சர்மா 3வது இடத்திலும் உள்ளனர்.
கேப்டன் பாபர் அசாம், தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவெடுத்துள்ளார் என்றால் நிச்சயம் மிகையாகாது. தற்போது உள்ள இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரமாகவும், வழிகாட்டியாகவும் அவர் இருந்து வருகிறார். மேலும் தனது அசாத்திய ஆட்டத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட சுட்டிக் குழந்தையின் வீடியோ ஒன்று இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. கனடாவின் டொராண்டோவில் வசித்து வரும் மூன்று வயதே நிரம்பிய அந்த குழந்தை தனக்கு வீசப்படும் பந்துகளை கேப்டன் பாபர் அசாம் ஸ்டைலில் சிக்ஸர் அடிப்பது போல் விளாசுகிறார். அவரது அப்பா அவரின் பெயர் சொல்லி அழைக்க, அந்த சுட்டிக் குழந்தையோ தன்னை 'நைல் சையத் பாபர் ஆசம்' என்று தான் அழைக்க வேண்டும் என அப்பாவிடம் கட்டளை இடுகிறார்.
Congrats @babarazam258 - you have inspired a generation @TheRealPCB @ESPNcricinfo #YourShots @SajSadiqCricket @TalhaAisham @SayaCorps pic.twitter.com/9CGZAqgnCO
— Farooq (@frooq) March 3, 2022
ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இணைய மற்றும் சமூக சமூக வலைதள பக்கங்களிலும் வைரலாகி வருகிறது.
bro, these no-look sixes are phenomenal.
— DND Academy (@dlallany) March 3, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.