கிங் கோலிய பாத்திருப்பீங்க… இந்த குயின் அனுஷ்கா கிரிக்கெட் ஆடி பாத்திருக்கீங்களா..?

Bollywood actress Anushka Sharma shares glimpse of cricket practicing for ‘Chakda Xpress’ video goes viral in social media Tamil News: ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக நடிகை அனுஷ்கா சர்மா தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Bollywood actress Anushka Sharma shares glimpse of cricket practicing for ‘Chakda Xpress’ video goes viral in social media Tamil News: ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக நடிகை அனுஷ்கா சர்மா தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Watch video: Anushka Sharma’s intense cricket practice for ‘Chakda Xpress’

Anushka Sharma Tamil News: பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை அனுஷா சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை காதலித்த இவர் கடந்த 2017ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு வாமிகா கோலி என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு

Advertisment

33 வயதான அனுஷா சர்மா இதுவரை 22க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது "சக்தா எக்ஸ்பிரஸ்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை மற்றும் காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

publive-image

தற்போதைய ஐசிசி உலகக் கோப்பையில், சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெண் என்ற புதிய உலக சாதனையை ஜூலன் கோஸ்வாமி படைத்தவர். மேலும் அவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாகவும் ஆனார். 1982 முதல் 1988 வரை, ஆஸ்திரேலியாவின் லின் ஃபுல்ஸ்டன் எடுத்த 39 விக்கெட்டுகளை அவர் சமன் செய்தும் இருந்தார்.

Advertisment
Advertisements
publive-image

இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது லட்சியத்தைத் தொடரும் பெண் வெறுப்பு அரசியலுக்கு மத்தியில் ஜூலன் கோஸ்வாமியின் குறிப்பிடத்தக்க பயணம் 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது இலக்கை எப்படி அடைந்தார், இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எப்படி தேர்வானார், மற்றும் அவர் நாட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒரு முன்மாதிரியாக எப்படி திகழ்கிறார் என்பது குறித்தும் இப்படம் பேசுகிறது. கடந்த 2018 இல் அவரது நினைவாக இந்திய தபால் தலை வெளியிடப்பட்டது.

publive-image

'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தை பாலிவுட் இயக்குநர் ப்ரோசித் ராய் இயக்க, அனுஷ்கா சர்மா மற்றும் அவரது சகோதரர் கர்ணேஷ் சர்மாவின் க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகவும் தயாராகி வருகிறது.

அனுஷ்கா சர்மாவின் வைரல் வீடியோ

publive-image

இந்நிலையில், ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக நடிகை அனுஷ்கா சர்மா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா சர்மா 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக விளையாடுவதற்கு வாரத்தில் ஆறு நாட்கள் 2-3 மணிநேரம் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோ பதிவில், "சக்தா எக்ஸ்பிரஸ் (Get-Sweat-Go!) தயாரிப்பு கடினமாகவும் தீவிரமாகவும் வருகிறது. நாங்கள் நாட்களை எண்ணுகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Viral Social Media Viral Virat Kohli Anushka Sharma Sports Cricket Viral Video Jhulan Goswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: