/indian-express-tamil/media/media_files/AMaxqxsq2b4ZaHenQuf3.jpg)
அஸ்வின் போலவே பந்தை சுழற்றிய பும்ரா - வீடியோ
Jasprit Bumrah, Ravichandran Ashwin: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) முதல் 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் 1-0 என்கிற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. தொடக்கம் முதலே இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டி வருகிறது. இதனால், தென் ஆப்ரிக்க அணி ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்தது.
அஸ்வின் போலவே பந்தை சுழற்றிய பும்ரா
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினைப் போலவே வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பவுலிங் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நேற்று நடந்த வலைப் பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா அஸ்வினைப் போல கைகளை மடக்கி பந்தை சுழற்றி வீசுகிறார். அவரது பின்புறத்தில் அஸ்வின் அதனைக் கவனிக்கிறார். 2, 3 முறை அவர் பந்துகளை வீசுகிறார். பும்ரா சுழற்பந்துவீசும் இந்த வீடியோவை அஸ்வினும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
Hey Ash, is that you? 🤔@Jaspritbumrah93 could fool anybody with this uncanny imitation of @ashwinravi99 in the #TeamIndia nets! 😂
— Star Sports (@StarSportsIndia) January 2, 2024
Name another bowler you'd love to see the pacer mimic. 😉
Tune-in to #SAvIND 2nd Test
Tomorrow, 12:30 PM | Star Sports Network#Cricketpic.twitter.com/u6fObA1wan
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.