Advertisment

தலைக்கேறிய கோபம், எரிச்சல்... ஹெல்மெட்டை சிக்சருக்கு பறக்கவிட்ட பிராத்வைட் - வீடியோ!

மைதானத்தின் நடுப்பகுதியில் இருந்து சில அடி தூரம் நடந்த பிராத்வைட், கோபமும், எரிச்சலும் தலைக்கேறியதால் கையில் இருந்த ஹெல்மெட்டை தூக்கிப்போட்டு பேட்டால் அடித்து பறக்கவிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Watch video Carlos Brathwaite hits his helmet for a six Tamil News

கார்லோஸ் பிராத்வைட், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்துகளில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 2016ல் டி20 சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் கார்லோஸ் பிராத்வைட் முதன்மையானவர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அரங்கேறிய பரபரப்பான இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீசுக்கு 156 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

Advertisment

இந்த சூழலில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த கார்லோஸ் பிராத்வைட், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்துகளில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 2016ல் டி20 சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Watch: Carlos Brathwaite hits his helmet for a six

இத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் தான் வெஸ்ட் இண்டீசின் கார்லோஸ் பிராத்வைட். ஆனால், தற்போது அவரது மவுசு நாளுக்கு நாள் குறைந்துவிட்டது. அவரது திறன் படிப்படியாக குறைந்துவிட்ட நிலையில், அவரை வெஸ்ட் இண்டீஸ் அணி கூட சர்வதேச போட்டியில் இருந்து கழற்றி விட்டுள்ளது. இதனால், தற்போது கார்லோஸ் பிராத்வைட் உள்ளூர் லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். 

இந்நிலையில், கேமன் தீவுகளில் நடைபெற்று மேக்ஸ்60 கரீபியன் டி10 தொடருக்கான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக கார்லோஸ் பிராத்வைட் விளையாடி வருகிறார். அவர் கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 7-வது வீரராக களமாடிய நிலையில், 7 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு வீசப்பட்ட பந்தை ஸ்ட்ரைட் திசையில் விரட்ட நினைத்தார். ஆனால், பந்து பவுன்ஸ் ஆகி கீப்பர் வசம் கேட்ச் ஆனாது. 

இதனால், பெரும் ஏமாற்றம் அடைந்த பிராத்வைட் தனது தலையைக் கீழே குனிந்தவாறு டக்-அவுட் நோக்கி நடையைக் கட்டினார். மைதானத்தின் நடுப்பகுதியில் இருந்து சில அடி தூரம் நடந்த அவர், கோபமும், எரிச்சலும் தலைக்கேறியதால் கையில் இருந்த ஹெல்மெட்டை தூக்கிப்போட்டு பேட்டால் அடித்து பறக்கவிட்டார். பந்து சிக்சருக்கு பறப்பது போல் சென்ற ஹெல்மெட் பவுண்டரிக்கு மேல் சென்று மைதானத்திற்கு வெளியே கீழே விழுந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 

பிராத்வைட் 88 சர்வதேச போட்டிகளில் பல்வேறு வடிவங்களில் விளையாடி 1000 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். மேலும் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2019 இல் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த போட்டியில் தான் அவர் கடைசியாக ஆடி இருந்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Video West Indies cricket news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment