வீடியோ: மனைவியிடம் நடனம் கற்கும் பாண்டியா… அப்படியே ஆடி அசத்தல்!

ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் நடனம் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் நடனம் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Watch video: Hardik Pandya learns to dance with Nataša Stanković Tamil News

Netizens loved the duo's grooving and Nataša responded with heart emoji in the comments section.

Hardik Pandya Natasa Stankovic Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி-20 உலகக் கோப்பைக்கு பின், இவரது தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் சுற்றிப்பயணம் செய்தது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடிய நிலையில், அதில், நவம்பர் 18 ஆம் தேதி நடந்த முதலாவது ஆட்டம் தொடர் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.

Advertisment

இதைத்தொடர்ந்து, நவம்பர் 20 ஆம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்பிறகு, நவம்பர் 22 ஆம் தேதி நடந்த ஆட்டம் சமனில் முடிந்தது. விட்டு விட்டு பெய்து வந்த மழையால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியுமானால் போனது. இறுதியில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

publive-image

மனைவியிடம் நடனம் கற்கும் பாண்டியா… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…

இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய நிலையில், அந்த தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தாயகம் திரும்பியுள்ள அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்தும், நண்பர்களுடன் மகிழந்தும் வருகிறார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் நடனம் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

ஹர்திக் பாண்டியா அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், அதில் அவர் "நடனப் பாடங்கள் எங்கிருந்து வருகின்றன" என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும், 3.5 மில்லியன் வியூஸ்களையும் பெற்றது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் துபாயில் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் குல்கிந்தர் பாஹியாவின் பிறந்தநாள் விழாவில் தோனி, கிஷான் மற்றும் பாட்ஷா ஆகியோருடன் ஹர்திக் நடமாடி மகிழ்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் காலா சஸ்மா பாடலை பாட்ஷா பாடியபோது, ​​தோனியும் ஹர்திக்கும் கோரஸ் வரிகளைப் பாடியும் அசத்தி இருந்தனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Viral Video Cricket Sports Viral Hardik Pandya India Vs New Zealand Viral News Indian Cricket Team

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: