Hilton Cartwright Tamil News: ஆஸ்திரேலியாவில் 2021–22 ஆண்டுக்கான மார்ஷ் ஒரு நாள் கோப்பை தொடர் (உள்ளூர் போட்டி) நடைபெற்றது. இத்தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று அரங்கேறிய நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸ் அணிகள் இந்த இறுதிப்போட்டியில் பலப்பரீட்ச்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜே ரிச்சர்ட்சன் 44 ரன்கள் எடுத்திருந்தார். நியூ சவுத் வேல்ஸ் அணியில் அதிகபட்சமாக டேனியல் சாம்ஸ் மற்றும் ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 226 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூ சவுத் வேல்ஸ் அணி 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 207 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் மேற்கு ஆஸ்திரேலியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மேலும், மார்ஷ் ஒரு நாள் கோப்பையையும் கைப்பற்றியது.
நியூ சவுத் வேல்ஸ் அணியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜே ரிச்சர்ட்சன், மத்தேயு கெல்லி, டி ஆர்சி ஷார்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
'வாட் அ கேட்ச் மொமெண்ட்'
இந்த இறுதிப்போட்டி ஆட்டத்தில் கோப்பையை வசப்படுத்திய மேற்கு ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஒருவர் தனது சிறப்பான கேட்ச் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
லெக்-சைடு லாங்-ஆனில் பீல்டிங் செய்த ஹில்டன் கார்ட்ரைட், நியூ சவுத் வேல்ஸ் அணியின் மோயஸ் ஹென்ரிக்ஸ் அடித்த பந்தை பறந்து சென்று டைவ் அடித்து பிடித்து அசத்தினார்.
ஹில்டன் கார்ட்ரைட் இன் இந்த கேட்ச் தொடரில் பிடிக்க மிகச்சிறப்பான கேட்ச் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹில்டன் கிடைமட்டமாக சென்று பிடித்த கேட்ச் 'வாட் அ கேட்ச்' என்று சொல்லும் அளவிற்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“