India vs New Zealand 1st T20 - Indian cricket team Tamil News: நியூசிலாந்து மண்ணில் சுற்றிப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு தொடங்க இருந்தது.
ஆனால், வெலிங்டனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள ஆர்வகமாக இருந்த நிலையில், வருண பகவான் கடைசி வரை இரக்கம் காட்டவில்லை.
கால்பந்தில் வாலிபால் விளையாடி மகிழ்ந்த இந்தியா-நியூசி., வீரர்கள்
இதற்கிடையில், இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்தில் வாலிபால் விளையாடி மகிழ்ந்தனர். அவர்கள் ஆர்வமாக விளையாடி வரும் இந்த வீடியோவை பிசிசிஐ அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மவுன்ட் மவுங்கானுய்யில் நடக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil