Virat Kohli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய அவர், அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று மும்மையில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அவர்களுடன் இணைந்து கோலியும் பயணிக்கிறார். விமானத்தில் பறக்கும் முன் கோலி, இந்திய வீரர்கள் ஹர்ஷல் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், விராட் கோலி மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமாரின் பங்களாவான கௌரி குஞ்சை ஹோட்டலாக மாற்றியுள்ளார். அதை ரசிகர்களுக்கு ஒரு சுற்றுலா வீடியோ போல தயார் செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மும்பையில் உள்ள ஒன்8 கம்யூன் என அழைக்கப்படும் தனது சமீபத்திய திட்டத்தைப் பற்றி பேசும் கோலி, ‘உணவே தனது மிகப்பெரிய முன்னுரிமை என்றும், உணவு விரும்பிகள் தனது ஹோட்டலுக்கு அடிக்கடி வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுகிறார்.
மேலும் அந்த வீடியோவில், விராட் கோலி தொலைக்காட்சி தொகுப்பாளர் மனீஷ் பாலுக்கு தனது ஹோட்டலை சுற்றிக் காண்பிக்கிறார். அவர்கள் இருவரும் சில உணவுகளை முயற்சி செய்கிறார்கள். அதே நேரத்தில் கோலி சாப்ஸ்டிக்ஸைப் பயன்படுத்துவதைப் பார்த்து மனீஷ் சிரிக்கிறார். கோலியின் ஈடுபாட்டின் அளவை அவர் பாராட்டவும் செய்துகிறார்.
“என்னால் ஈடுபட முடியாவிட்டால் நான் எதையும் செய்ய மாட்டேன். நான் ஒரு திட்டத்தில் இணைந்திருந்தால், நான் முதலீடு செய்யப்பட வேண்டும். உணவுத் தரம் ‘தனக்காகப் பேசுகிறது’ என்று கோலி கூறி விளக்குகிறார்.
கோலியின் மோசமான உணவு அனுபவத்தைப் பற்றி கேட்டபோது, அவர் தனது மனைவி, நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் அவர்களின் மகள் வாமிகாவுடன் பாரிஸுக்கு சமீபத்தில் சென்ற பயணத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார், “சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு கனவாக இருந்தது. ஆனால், பல விருப்பங்கள் இல்லை. மேலும் மொழித் தடையும் இருந்தது.” என்றும் கோலி கூறுகிறார்.
கிஷோர் குமாரின் பழைய பங்களாவை தான் ஏன் தேர்வு செய்தேன் என்பது குறித்து பேசிய விராட் கோலி, தான் பாடகர் கிஷோர் குமாரின் தீவிர ரசிகன் என்றும், “மேரே மெஹபூப் கயாமத் ஹோகி” என்ற பாடல் ரசிகர்களுக்கு விருந்தளித்ததாகவும் அவர் விளக்குக்கிறார்.
“அவரது பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டார், நான் எப்போதும் கிஷோர் தான் என்று சொல்வேன். ஏனென்றால், அவரை எனக்கு அந்த அளவிற்கு பிடிக்கும்.” என்று கோலி கூறுகிறார்.
இந்த ஹோட்டலை தவிர, விராட் கோலி அதே பெயரில் சில ஹோட்டல்களை நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் புனே உள்ளிட்ட பல நகரங்களில் வைத்துள்ளார். மேலும் சில பிராண்டுகளிலும் முதலீடு செய்துள்ள அவர், பல வணிகங்களையும் கொண்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil