scorecardresearch

மாற்றுத்திறனாளி ரசிகருக்கு டி- ஷர்ட் கொடுத்த கோலி… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!

Virat Kohli is wins hearts on the social media for his gesture of gifting a special fan his Team India t-shirt viral video Tamil News: மாற்றுத்திறனாளி ரசிகருக்கு கோலி தனது டி- ஷர்ட்டை பரிசாக கொடுக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Watch video: Kohli Wins Hearts for gifting t-shirt to Specially-abled Fan, Video Goes Viral

Virat Kohli viral video Tamil News: இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (4ம் தேதி) முதல் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்தது. சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 சேர்த்து முதல் இன்னிங்சிஸை டிக்ளர் செய்தது. தொடர்ந்து வந்த இலங்கை அணி 174 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

எனவே ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா, 2வது இன்னிங்சில் இலங்கையை 178 ரன்னில் சுருட்டி 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா 175 ரன்கள் (228 பந்துகள் 17 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட) குவித்தார். அவருடன் உறுதுணையாக ஆடிய அஸ்வின் 61 ரன்கள் (82 பந்துகள் 8 பவுண்டரிகள்) எடுத்திருந்தார்.

இதேபோல் மிடில்- ஆடரில் களமிறங்கி இலங்கை அணியை கலங்கடித்த விக்கெட் கீப்பர் வீரர் பண்ட் 96 ரன்கள் (97 பந்துகள் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள்) குவித்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியில் ஜடேஜா 9 விக்கெட்டுகளையும், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

கோலியின் 100வது டெஸ்ட்

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதனால் அவர் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், அவரது சத தாகத்தை தீர்ப்பார் என்றும் பேசப்பட்டது. ஆனால் கோலி 45 ரன்க ள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

எனினும், இந்திய அணியில் உள்ள வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவருக்கு சிறந்த தருணங்களை கொடுத்தனர். அவரது 100வது டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, அவருக்கு வெற்றியை சமர்ப்பித்தது. போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி, இப்போட்டியின் தான் பதற்றமாக இருந்ததாகவும், மீண்டும் டெஸ்ட் அரங்கில் அறிமுகமானதைப் போல் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டிடம் இருந்து ஸ்பெஷல் தொப்பியை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்து என்றும் கூறினார்.

நெகிழ வைக்கும் வைரல் வீடியோ

இப்போட்டிக்கு பிறகு மைதானத்தில் இருந்து பேருந்தில் புறப்பட சென்ற விராட் கோலி, அங்கு இருந்த மாற்றுத்திறனாளி ரசிகருக்கு தனது டி- ஷர்ட்டை பரிசாக கொடுத்தார். இதை வீடியோவாக பதிவு செய்த “தரம்வீர் பால்” என்ற அந்த ரசிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவின் கேப்ஷனில் தரம்வீர் பால், “இது எனது வாழ்க்கையின் சிறந்த நாள் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியின் டி-ஷர்ட்களை பரிசளித்தார் வாவ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கவனத்தை விரைவாகக் கவர்ந்து வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு சிலர் கமெண்ட் செய்தும் வருகின்றனர். அதில் ஒரு ரசிகை, அந்த வீடியோ தனது கண்களில் கண்ணீரை வரவழைத்ததாகவும், பயோ-பபிள் இல்லாவிட்டால் கோலி ரசிகருடன் பேசியிருப்பார் என்றும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகரோ, “முற்றிலும் மகத்துவமானது” என்று கூறி கோலியின் தாராள உள்ளத்தை புகழ்ந்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் வருகிற மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Watch video kohli wins hearts for gifting t shirt to specially abled fan video goes viral