News about Rishabh Pant, IND and Virat Kohli in tamil: வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 14 ஆம் தேதி முதல் சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
சிங்கிள் எடுக்க மறுத்த பண்ட்… கோபக் கனலை கக்கிய கோலி
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இன்று 2 ஆம் நாள் ஆட்ட நேரத்தில், மதிய உணவு இடைவேளைக்கு முன் கடைசி பந்தில் சிங்கிள் தட்டிய கோலிக்கு பண்ட் ரன் ஓட மறுத்தார். இதனால் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கோலி மெஹிதி ஹசன் மிராஸின் பந்து வீச்சை ஆன்-சைட் நோக்கி தள்ளினார். பின்னர் அவர் ஒரு ரன் தொடங்கினார்; இருப்பினும், மறுமுனையில் இருந்த பண்ட் அவருக்கு இசைவு கொடுக்கவில்லை. இதனால் கோலி மீண்டும் தனது கிரீஸுக்கு டைவ் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பந்து வீச்சிற்குப் பிறகு, ரன் கூட ஓடாதது குறித்து கடும் கோபத்திற்குள்ளன கோலி பண்ட்டை பார்த்து கோபப் பார்வை பார்த்தார். அவரது பார்வை சுட்டெரிப்பது போல் இருந்தது. எனினும், நடுவர்கள் மதிய உணவிற்கு அழைத்த பிறகு இருவரும் ஒன்றாக டிரஸ்ஸிங் ரூமிற்குச் செல்லும்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். சமாதானம் ஆனது போன்ற தோற்றத்தையும் கோலி வெளிப்படுத்தினார்.
இருப்பினும், கோலி பண்டை நோக்கி கோபக் கனலை கக்கிய இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபட்டு வைரலாகி வருகிறது.
Charisma 🥵🔥🔥🔥🔥 Cinema ah aazha vaa Thalaiva @imVkohli pic.twitter.com/uZTZI3NyKP
— Vɪʀᴀᴛ ᴇʟᴀɴɢᴏ🇮🇳🏂/82* MCG (@ElangoAKist) December 23, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil