News about MCG, Kagiso Rabada in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 21 ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (திங்கள் கிழமை) மெல்போர்னில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 386 குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தனது 100 டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து 200 ரன்கள் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 84 ரன்கள் எடுத்தார்.
பவுண்டரி லயனில் ஸ்ட்ரெச்சிங் செய்த ரபாடா… அவரைப் பின்தொடர்ந்த ரசிகர்கள் - வீடியோ!
இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் போது ஒரு வேடிக்கையான சம்பவம் அரங்கேறியது. இந்த ஆட்டத்தின் போது தென்ஆப்பிரிக்கா வீரர் ககிசோ ரபாடா பவுண்டரி கோட்டிற்கு அருகில் நின்றவாறு ஸ்ட்ரெச்சிங் செய்து கொண்டிருந்தார். அதாவது, ஃபீல்டிங் செய்த நேரத்தில் கை மற்றும் இடுப்பு பகுதியை அசைத்தவாறு இருந்தார். அப்போது ஸ்டாண்டில் இருந்து ஆட்டத்தை கண்டு களித்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தியும், அவர் செய்வதைப் போலவே அவர்கள் அனைவரும் ஸ்ட்ரெச்சிங் செய்து மகிழந்தனர்.
ககிசோ ரபாடாவுக்கு ரசிகர்கள் உற்சாகமூட்டும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ:
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil