Advertisment

'கேட்ச் பிடிக்க மாட்ட, உனக்கு ஆட்டோகிராப் வேணுமா?': தீபக் சாஹரை கலாய்த்த தோனி - வீடியோ

குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சுப்மன் கில் கேட்சை 2வது ஓவரிலேயே தீபக் சாஹர் பிடிக்க தவறி இருந்தார்.

author-image
WebDesk
May 30, 2023 18:06 IST
Watch video: MS Dhoni refuses Deepak Chahar’s autograph request after CSK vs GT IPL 2023 final Tamil News

Deepak Chahar asked for an autograph from Dhoni. (Screengrab)

MS Dhoni refuses Deepak Chahar’s autograph request after CSK vs GT IPL 2023 final Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது.

Advertisment

இந்த போட்டி முடிந்த பிறகு கேப்டன் தோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான வீரரான தீபக் சாஹர் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தார். உடனே தோனி உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது என்று விலகினார். அப்போது அருகில் இருந்தவரிடம் கேட்ச் பிடிக்க தெரியல இவனுக்கு எப்படி ஆட்டோகிராப் போட முடியும் என்பது போல் கூறி தீபக் சஹாரை தோனி கலாய்த்தார்.

இருப்பினும், கடைசில் தீபக் சாஹர் அணிந்திருந்த சி.எஸ்.கே ஜெர்சியில் தோனி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கேட்சை 2வது ஓவரிலேயே தீபக் சாஹர் பிடிக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Ms Dhoni #Cricket #Sports #Viral #Chennai Super Kings #Deepak Chahar #Gujarat Titans #Ipl Finals #Viral Video #Ipl News #Ipl Cricket #Ipl #Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment