KFC Big Bash League (BBL) – Brisbane Heat vs Sydney Sixers Tamil News: 2022-23 ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் (பி.பி.எல்) தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த மெக்ஸ்வீனி 84 ரன்களும், ஜோஷ் பிரவுன் 62 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 225 ரன்கள் வெற்றி இலக்கை சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபார கேட்ச்ஷை பிடித்த மைக்கேல் நெசர்
இந்த ஆட்டத்தில் 225 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய சிட்னி சிக்சர்ஸ் அணியில் மிடில்-ஆடரில் களமாடிய ஜோர்டான் சில்க் அதிரடியாக விளையாடி வந்தார். 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என அதிவேகமாக ரன்களை குவித்து வந்த அவர் 23 பந்துகளில் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் மார்க் ஸ்டெகேடீ வீசிய 18.2 வது ஓவரில் ஒரு அசத்தலான சிக்ஸரை விளாசிய போது, பவுண்டரி கோட்டிற்கு அருகில் இருந்த மைக்கேல் நெசர் ஒரு அபாரமான கேட்சை பிடித்தார். நெசர் பிடித்த அந்த கேட்ச் ஆட்டத்தைத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
டீப் திசையில் நின்று இருந்த நெசர், பந்தை பவுண்டரி கோட்டிற்கு முன்பு வைத்து பிடித்தார். ஆனால், அந்த கோட்டை அவர் கடப்பார் என்பதை உணர்ந்தவுடன், அவர் பந்தை மேலே எறிந்து விட்டார். இருப்பினும், அவரது ரிலீஸ் பந்து பவுண்டரிக்கு மேல் கொஞ்சம் அதிகமாகச் சென்றது. ஆனால் நெசர் அங்கு நிற்கவில்லை. பவுண்டரியைத் தாண்டிய பிறகு, நெசர் மீண்டும் ஒருமுறை பந்தை மேலே தூக்கி போடுகிறார். அவரின் உடல் பாகங்கள் எதுவும் தரையுடன் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்து, பின்னர் பவுண்டரி கோட்டிற்கு முன்பு தாவி கேட்சை பிடித்து முடிக்கிறார்.
This is fascinating.
— KFC Big Bash League (@BBL) January 1, 2023
Out? Six? What's your call? #BBL12 pic.twitter.com/v22rzdgfVz
புத்திசாலித்தனமான பீல்டிங் இருந்தபோதிலும், அவரது முயற்சிகள் ரசிகர்களாலும் நிபுணர்களாலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. பலரும்புத்தகத்தில் உள்ள விதி என்ன சொல்கிறது? அதன் படி தான் முடிவுகள் வழங்கப்பட்ட வேண்டும் கூறி வருகின்றனர்.
இந்த கேட்ச் பிடிக்கப்பட்ட போது, ஃபாக்ஸ் கிரிக்கெட் வர்ணனைக் குழுவில் இருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட், ஏன் அவுட் கொடுக்கப்பட்டது என்று யோசித்து குழப்பமடைந்தவர்களில் ஒருவராக காணப்பட்டார். ஆனால், இது விதிப்படி அவுட் என்றும், விதிகளுக்கு உட்பட்டது என்றும் அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.
அப்படியென்றால், விதி உண்மையில் என்ன சொல்கிறது?
மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) வகுத்துள்ள விதிகளின்படி, சட்டம் 19.5.2: “மைதானத்துடன் தொடர்பில் இல்லாத ஒரு ஃபீல்டர், பந்து வீச்சாளரால் பந்து வீசப்பட்ட பிறகு, பந்துடன் அவரது முதல் தொடர்புக்கு முன், மைதானத்துடன் அவரது இறுதித் தொடர்பு ஏற்பட்டால், எல்லைக்கு அப்பால் தரையிறக்கப்பட்டதாகக் கருதப்படுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளது. சுருக்கமாக கூற வேண்டுமென்றால், ஒரு ஃபீல்டர் பந்தை பவுண்டரிக்கு அப்பால் பிடிக்கும் போது, அவர் மைதானத்துடன் தொடர்பில் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த விதியின் படி, நெசர் பிடித்த கேட்ச்-க்கு அவுட் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருபுறம் கிரிக்கெட் ரசிகர்களால் விதிகள் பகிரப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நெசர் பிடித்த கேட்ச் இணைய பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil