ICC Womens World Cup 2022 Tamil News: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி - பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
அசத்தல் வெற்றி
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா வாஸ்ட்ராகர் 67 ரன்களும், ஸ்னே ரானா 53 ரன்களும், தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிர்தி மந்தனா 52 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் என்கிற கவுரவமான ஸ்கோரை எட்டி இருந்தது.
தொடர்ந்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ராஜேஸ்வரி கெயக்வாட் 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
That's that from #INDvPAK game at #CWC22.
Pakistan are bowled out for 137 in 43 overs.#TeamIndia WIN by 107 runs.
Scorecard - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/jmP7xCPowi— BCCI Women (@BCCIWomen) March 6, 2022
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி இதுவரை தோல்வியை தழுவியது இல்லை என்கிற பதிவு இருந்து வரும் நிலையில், நேற்றை ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அதை தொடர்ந்துள்ளனர். மேலும், முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. எனவே, இந்திய ரசிகர்கள் மகளிர் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ…
இதற்கிடையில், இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Match day! Our women are at Bay Oval for #PAKvIND #TeamPakistan #CWC22 #BackOurGirls pic.twitter.com/eiWbsOQuac
— Pakistan Cricket (@TheRealPCB) March 5, 2022
இந்திய மகளிர் அணியினர், பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் பெண் குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தது மற்றும் அக்குழந்தையுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படமும், வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Little Fatima's first lesson in the spirit of cricket from India and Pakistan 💙💚 #CWC22
📸 @TheRealPCB pic.twitter.com/ut2lCrGL1H— ICC (@ICC) March 6, 2022
Bismah Maroof's legacy will go far beyond her achievements on the field. In a society that often tells women to make choices between career and family, she's showing that you can have both! Such an inspiring person.pic.twitter.com/Vp7EB2iwKd
— Aatif Nawaz (@AatifNawaz) March 6, 2022
களத்தில் இரு அணிகளுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டாலும், களத்திற்கு வெளியே இந்திய மகளிர் அணியினரின் இந்த செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள மற்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.