Advertisment

கவர் திசையில் அடிக்க வேண்டிய பந்தை தேட்மேன் திசையில் சிக்ஸ்: ஜாம்பவான்களை வியக்க வைத்த சூரியகுமார்- வீடியோ

ஷமியின் பந்தை சூரியகுமார் சிக்ருக்கு பறக்கவிட்டதை வியப்புடன் பார்த்த ஜாம்பவான் வீரர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WATCH video: Suryakumar Yadav's Crazy Shot, legendary players amazed Tamil News

Suryakumar Yadav(IPL 2023)

16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்குநடந்த 57-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் – நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி இந்த ஆட்டத்தில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீசுவதாக அறிவித்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய சூரியகுமார் யாதவ் 103 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 219 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால், 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, தற்போது 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்டிஹ்ல் உள்ளது.

ஜாம்பவான்களை வியக்க வைத்த சூரியகுமார்

publive-image

இந்த ஆட்டத்தில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மும்பை அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்திருந்தார். நேற்றைய ஆட்டத்தில் அவர் தனது வழக்கமான ஸ்டைலில் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸரு க்கு பறக்கவிட்டார். அவரது ஆட்டத்தை கண்டு பார்த்த அனைவரும் ரசித்ததுடன், மும்பை இன்னிங்ஸ் முடிவடைந்ததும், குஜராத் வீரர்கள் அனைவரும் சூர்யகுமார் யாதவை பாராட்டினர்.

publive-image

குறிப்பாக அவரது அதிரடி ஆட்டத்தை கண்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வியந்து போனார். முகமது ஷமி வீசிய ஒரு கடினமன பந்தை எதிர்கொண்ட சூரியகுமார், தனது பேட்டை வளைத்து கவர் திசையில் அடிக்க வேண்டிய பந்தை தேர்ட் மேன் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த சிக்சரை ஆச்சர்யத்துடன் பார்த்த சச்சின், அருகில் இருந்த பியூஸ் சாவ்லாவிடம் அந்த ஷாட்டை எவ்வாறு அடித்தார் என்பதை சைகை மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில், சூரியகுமாரின் அந்த சிக்சரை ஜாம்பவான் வீரர் சச்சின் வியப்புடன் பார்த்து, சைகையுடன் பாராட்டிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது.

ஜாம்பவான் வீரர்கள் புகழாரம்

முன்னாள் ஆஸ்திரேலிய நட்சத்திரம் டாம் மூடி சூரியகுமாரின் இந்த ஷாட்டைப் பற்றி முற்றிலும் பிரமிப்பில் ஆழ்ந்தார். மேலும் அவர் தனது வாழ்நாளில் இதுபோன்ற எதையும் முயற்சித்ததை தான் பார்த்ததில்லை என்றும் கூறினார். சக நிபுணரான அமோல் மஜும்தார், சூரியகுமாருக்கு பந்துவீசுவது சாத்தியமில்லை என்று கூறிய பிறகு, அந்த ஷாட்டைக் குறிப்பிடும் போது, ​​அடிக்க முயற்சிக்கும் வீரரின் தைரியத்தைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்.

"அந்த குறிப்பிட்ட பந்தில், தேர்ட் மேன் மீது சிக்சர் அடிப்பதை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பேட்டால் கிடைமட்டமாக பந்தை அடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். தேர்ட் மேனுக்கு மேல் ஒரு கட் ஷாட் செல்கிறது. பேட்டின் நடுவில் இருந்து சிக்ஸர் அடிப்பதை நான் பார்த்ததில்லை, அடர்த்தியான விளிம்பில் பறந்ததைக் கூட பார்த்திருக்கிறேன். என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை!"

“என் வாழ்நாளில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் ஏறக்குறைய 10 மில்லியன் பந்துகள் வீசப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன், இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அது முற்றிலும் புதியதாக இருந்தது. அவர் அதைச் செய்யக்கூடியவர் என்பது அவரது தலையில் இருந்தது, வேறு யாருடைய தலையிலும் இல்லை." என்று முன்னாள் ஆஸ்திரேலிய நட்சத்திரம் டாம் மூடி கூறினார்.

தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்யும் பணியில் இருக்கும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் இயான் பிஷப், இந்த ஷாட் அபத்தமானது. "இது எனக்கு என்றென்றும் "தி ஷாட்" என்று அறியப்படும்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Sachin Tendulkar Gujarat Titans Ipl News Ipl Cricket Suryakumar Yadav Ipl Mumbai Indians
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment