Advertisment

மும்பை தீயணைப்புப் படை கொடுத்த பலத்த வரவேற்பு... குளிர்ந்து போன இந்திய வீரர்கள் பயணித்த விமானம் - வீடியோ!

இந்திய அணி வீரர்கள் வந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானம் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
WATCH video T20 World Cup champion Team Indias flight receives special water cannon salute Mumbai Tamil News

மும்பை தீயணைப்புப் படையின் சிறப்பு நீர் பீரங்கி மரியாதை அளிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. 

Advertisment

இந்திய அணியின் இந்த வெற்றி மூலம், 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தாலும், பார்படாஸில் பெரில் புயல் காரணமாக இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று புயல் ஜமைக்காவை நோக்கி நகர்ந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று புதன்கிழமை  இந்தியா புறப்பட்டனர். 

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவரும் இன்று காலை 6 மணிக்கு தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையத்தில் திரளாக குவிந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, 11:00 மணியளவில் இந்திய அணி வீரர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

மரியாதை 

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக மும்பை வந்தடைந்தனர். அவர்கள் வந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானம் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

இந்திய அணி வீரர்கள் பயணித்த விமானமான யூ.கே 1845 (விஸ்தாரா ஏர்லைன்ஸ் வழங்கிய சிறப்பு பெயர்) சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய நிலையில், அப்போது, மும்பை தீயணைப்புப் படையின் சிறப்பு நீர் பீரங்கி மரியாதை அளிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Mumbai T20 World Cup 2024 Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment