/indian-express-tamil/media/media_files/3TH74fcZ4lZZ2bnQs7CV.jpg)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 'பாக்சிங் டே' டெஸ்ட் மோதல்: பவுலிங் போட்ட ராகுல், கோலி - வைரல் வீடியோ
India-vs-south-africa | rahul-dravid | virat-kohli: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியது. இதில், 'பாக்சிங் டே' போட்டியாக முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. ராகுல் 70 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்கமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சில ஓவர்கள் தாக்குப்பிடித்த கே.எல் ராகுல் - சிராஜ் ஜோடி ஜோடியில், சிராஜ் 5 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணாவுடன் ஜோடி அமைத்த ராகுல், சிக்ஸரை பறக்கவிட்டு சதம் விளாசினார். மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராகுல் 137 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.
பவுலிங் போட்ட ராகுல், கோலி - வைரல் வீடியோ
இந்நிலையில், முதல் டெஸ்டின் முதல் நாள் டாஸ்க்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீடியம் -பாஸ்ட் பவுலிங் போட்டார். அவர் உச்சமாக பந்து வீசிய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பயிற்சியாளர் ராகுல் பவுலிங் செய்கிறார். அவரைத் தொடர்ந்து முன்னணி வீரரான கோலியும் பந்துவீசி பயிற்சி எடுக்கிறார்.
— Nihari Korma (@NihariVsKorma) December 26, 2023
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.