IND vs SA 2nd T20I Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி-20 போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 40 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 149 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்கா முதலில் விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தாலும், அந்த அணியின் மிடில்- ஆடார் வீரர் ஹென்ரிச் கிளாசென் (46 பந்தில் 81ரன்கள்) அதிரடியாக விளையாடி, அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம், அந்த அணி தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் குழுமிருந்த இருந்த ரசிகர்கள் வந்தே மாதரம் பாடலை பாடிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கட்டாக்கின் பாராபதி ஸ்டேடியத்தில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளின் ஆட்டத்தை பார்க்க குவிந்திருந்த ரசிகர்கள் தங்கள் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து “மா துஜே சலாம் மற்றும் வந்தே மாதரம்” பாடலைப் பாடினர். இதை வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது பார்ப்போரை நெகிழ வைக்கும் விதமாக அமைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டும், இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
Crowd sang "Maa Tujhe salam" during the 2nd T20 at Cuttack – beautiful.pic.twitter.com/0C1n21wYIF
— Johns. (@CricCrazyJohns) June 12, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil