ஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ!

ஐபிஎல் 2018ம் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து அணி வீரர் பிராவோ சி.எஸ்.கே-வுக்காக புதிய பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

ஐபிஎல் 2018ம் ஆண்டின் லீக் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அந்த அணியின் செல்ல பிள்ளை, ராப் பாடகர், சேட்டை மன்னன் டிஜே பிராவோ புதிய பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

‘வி ஆர் தி கிங்ஸ்’ என்று தொடங்கும் இந்த பாடலை நிஷல் ஸவெரி இசையமைத்துள்ளார். இப்பாடலில் வீடியோ உருவாக்கம் திவோ படைத்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த பாடலுக்கு பிராவோ வரிகளை எழுதி அவரே பாடியுள்ளார்.

விளையாட்டு மைதானத்தில் தான் எதிர் அணிகளை விறட்டியடித்தார் என்று நினைத்தால், பாடலிலும் பிற அணிகளை ஒரு கைப்பார்த்துள்ளார். மற்ற அணிகளை கேலி செய்வதோடு மட்டும் நிறுத்தாமல், நடிகை ப்ரீத்தி ஸிந்தாவையும் கலாய்த்துள்ளார்.

இதற்கு மேல் வீடியோவை பற்றி கூறிவிட்டால் உங்களுக்கு போர் அடித்துவிடும். பாடலை பார்த்து என்ஜாய் செய்யுங்கள்.

×Close
×Close