பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்ற லீக் ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணி, லீட்ஸ் யுனைடெட் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் யுனைடெட் 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 13 போட்டிகளில் விளையாடியுள்ள மாஸ்செஸ்டர் யுனிடெட் அணி 8 வெற்றி 2 டிரா 4 தோல்விகளுடன் 26 புள்ளிகள் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
தோல்வியை சந்தித்த லீட்ஸ் யுனைடெட் 14 ஆட்டங்களில் 5 வெற்றி 2 டிரா 7 தோல்வியுடன் புள்ளிபட்டியலில், 14-வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வி குறித்து லீட்ஸ் யுனைடெட் அணியின் மேனேஜர், மார்செலோ பீல்சா கூறுகையில், இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், எங்களது விளையாட்டு பாணியை மாற்றமாட்டோம். இந்த தோல்வியை மறக்க அணியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் . "நாங்கள் தாக்குதல் ஆட்டத்தை கொடுக்க முயற்சித்தோம். ஆனால், அது தவறாக நடந்துவிட்டது. இதுதான் அவர்கள் பெரும்பான்மையான வாய்ப்புகளை உருவாக்கியது.
எங்களின் இந்த தவறை எதிரணியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நாங்கள் எங்கள் அணியில், நிறைய விஷயங்களை சரிசெய்வோம், ஆனால் நாங்கள் விளையாடும் முறையை கைவிட மாட்டோம். "நாங்கள் தோற்றால் எங்கள் விளையாட்டின் தரம் குறித்து கேள்விகள் வருகிறது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றால், அதற்காக பாராட்டப்படுகிறோம். ஆனால் எந்த நிலை வந்தாலும் தண்ணீரில் மிதக்கும் கப்பலைப்போல் நடுநிலையாகத்தான் இருப்போம்”என்று அவர் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"