Advertisment

'வெறும் அதிர்ஷ்டம் தான்': 1983ல் கோப்பை வென்ற இந்தியா பற்றி வெ.இ ஜாம்பவான் வீரர் பேச்சு

'1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றது வெறும் அதிர்ஷ்டம் தான்' என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரரான ஆண்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
West Indies legend Andy Roberts on 1983 World Cup winning Indian cricket team Tamil News

'180 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு அதிர்ஷ்டம் இந்தியாவின் வழியில் சென்றது. நாங்கள் ஆட்டமிழக்கப்படவில்லை, ஆட்டத்தில் தோற்றோம்.' என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

Andy Roberts on 1983 World Cup final Tamil News: இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 1983 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்தியா முதல்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்டது. அப்போது நடப்பு சாம்பியனாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முந்தைய இரண்டு உலகக் கோப்பைகளையும் வென்று இருந்தது. மேலும் இந்த உலகக் கோப்பையையும் அந்த அணி தான் வெல்லும் என்றும் கருதப்பட்டது.

Advertisment

ஆனால், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சியூட்டும் தோல்வியைக் கொடுத்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா முதல் உலகக் கோப்பை பட்டத்தையும் வாகை சூடியது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரரான ஆண்டி ராபர்ட்ஸ், இந்தியா வெற்றி பெற்றது வெறுமனே அதிர்ஷ்டத்தில் தான் என்றும், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி அவரை பெரிதும் ஈர்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

publive-image

ஆண்டி ராபர்ட்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில்,“நாங்கள் ஃபார்மில் இருந்தோம். ஆனால் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அது 1983ல் இந்தியாவின் அதிர்ஷ்டமாக போனது. எங்களிடம் இருந்த அந்த சிறந்த அணியால், 1983ல் இரண்டு ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்றோம். பின்னர், ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் இந்தியாவை 6-0 என்ற கணக்கில் வென்றோம். எனவே, அது அந்த போட்டியில் மட்டுமே எங்களது ஆட்டம் மோசமாக இருந்தது. 180 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு அதிர்ஷ்டம் இந்தியாவின் வழியில் சென்றது. நாங்கள் ஆட்டமிழக்கப்படவில்லை, ஆட்டத்தில் தோற்றோம். இது அதீத நம்பிக்கையோ அல்லது மனநிறைவோ அல்ல.

publive-image

பேட்ஸ்மேன்களில், நான் குறிப்பாக யாராலும் ஈர்க்கப்படவில்லை. யாருக்கும் அரைசதம் கிடைக்கவில்லை. பந்துவீச்சாளர்களில், யாருக்கும் 5-ஃபெர் அல்லது 4-ஃபெர் கூட கிடைக்கவில்லை. எனவே, நான் குறிப்பாக ஈர்க்கப்படவில்லை. நீங்கள் நல்ல தரமான இன்னிங்ஸை விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் உங்களை ஈர்க்கிறார்கள். இந்தியாவில் இருந்து யாரும் அதைச் செய்யவில்லை.

விவ் (ரிச்சர்ட்ஸ்) அவுட் ஆனபோது, எங்களால் ஒருபோதும் மீள முடியாது என்று நினைத்தோம். 1975 மற்றும் 1979ல் நாங்கள் உள்ளார்ந்து இருந்தோம் என்பதுதான் 2 இறுதிப் போட்டிக்கும் இடையில் உள்ள ஒரே வித்தியாசம். 83ல் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். அதுதான் வித்தியாசம்” என்று ஆண்டி ராபர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டாரில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket India Vs West Indies West Indies Kapil Dev
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment