2024-25 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு ஒரு நாள் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான 10-வது லீக் போட்டி இன்று காலை நடைபெற்ற நிலையில், அதில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - டாஸ்மேனியா அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டாஸ்மேனியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி, டாஸ்மேனியா பவுலர்கள் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காமல் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டி ஆர்சி ஷார்ட் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அந்த அணி முதல் இரண்டு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. ஆனால், இதன்பிறகு தான், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி சார்பில் அடுத்தடுத்து களமாடி வீரர்கள் ஒரு ரன் கூட எடுக்காமல் வரிசையாக டக்-அவுட் ஆகி வெளியேறினர். அதாவது, 52 ரன்னுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 53 ரன்னுக்குள் மொத்தமாக ஆல்-அவுட் ஆகியது.
அந்த ஒரு ரன் 8-வது விக்கெட்டுக்குப் பின் தான் எடுக்கப்பட்டது. அந்த ரன்னும் ஒயிடு கொடுத்ததன் மூலம் வந்தது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய வீரர்களில் ஆறு பேர் டக் அவுட்டாகினர், இதில் ஆஸ்திரேலிய ஒயிட்-பால் நம்பிக்கையாளர்களான ஹில்டன் கார்ட்ரைட், கூப்பர் கோனாலி, ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், ஜே ரிச்சர்ட்சன் மற்றும் ஜோயல் பாரிஸ் ஆகியோர் அடங்குவர், அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் 1 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.
டாஸ்மேனியா அணிக்காக, பியூ வெப்ஸ்டர் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோல், 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்த பில்லி ஸ்டான்லேக் 3 விக்கெட்டை கைப்பற்றினார். வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 54 ரன்கள் கொண்ட எளிய இலக்கை துரத்திய டாஸ்மேனியா 9 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. டாஸ்மேனியா தரப்பில் மிட்செல் ஓவன் 29 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய உள்நாட்டு ஒரு நாள் கோப்பையில் குறைந்த ரன்கள்
51 – சதர்ன் ஆஸ்திரேலியா vs TAS ஹோபார்ட்டில், 2003
53 – பெர்த்தில் மேற்கு ஆஸ்திரேலியா vs TAS, 2024
59 – வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா vs VIC மெல்போர்னில், 1969
59 – சிட்னியில் CA XI vs NSW, 2015.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“