Asia Cup 2022 - indian cricket team Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்து நடைபெற்று வருகிறது. தற்போது இத்தொடருக்கான சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், துபாயில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
நடப்பு ஆசியக் கோப்பை சூப்பர் 4 பட்டியலை பொறுத்தவரை, இந்த சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
வரவிருக்கும் சூப்பர் 4 போட்டிகள்
செப்டம்பர் 6, செவ்வாய்க்கிழமை - துபாய் இந்தியா vs இலங்கை
செப்டம்பர் 7, புதன்கிழமை - துபாய் - பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
செப்டம்பர் 8, வியாழன் துபாய் - இந்தியா vs ஆப்கானிஸ்தான்
செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை துபாய் இலங்கை vs பாகிஸ்தான்
இறுதிப் போட்டி செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை துபாய்
இறுதிப் போட்டியில் நுழைய இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு?
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். எஞ்சியிருக்கும் 2 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றாலும், 2க்கும் மேற்பட்ட அணிகள் 4 புள்ளிகளுடன் முடிவதால், இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வாய்ப்பு சற்று கடினமாகிறது.
இன்று இரவு இலங்கையையும், வியாழன் அன்று ஆப்கானிஸ்தானையும் இந்தியா வென்றால், 3 அணிகள் (இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை) இன்னும் தலா 4 புள்ளிகளுடன் சுற்று முடிவடையும். மேலும், சூப்பர் 4 முடிவில் மூன்று அணிகளின் நெட் ரன் ரேட் உடன் டை-பிரேக்கராக மாறும்.
காட்சி 1
பாகிஸ்தான் - 3 போட்டிகளில் 4 புள்ளிகள்
இலங்கை - 3 போட்டிகளில் 4 புள்ளிகள்
இந்தியா - 3 போட்டிகளில் 4 புள்ளிகள்
ஆப்கானிஸ்தான் - 3 போட்டிகளில் 0 புள்ளிகள்
இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைய எளிதான வழி என்னவென்றால், சூப்பர் 4 சுற்றில் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். இதேபோல், இந்திய அணி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்த வேண்டும்.
காட்சி 2
பாகிஸ்தான் - 3 போட்டிகளில் 6 புள்ளிகள்
இந்தியா - 3 போட்டிகளில் 4 புள்ளிகள்
இலங்கை - 3 போட்டிகளில் 2 புள்ளிகள்
ஆப்கானிஸ்தான் - 3 போட்டிகளில் 0 புள்ளிகள்
இலங்கை இந்தியாவிடம் தோற்றாலும், அந்த அணி தனது இறுதி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். இதேபோல், ஆப்கானிஸ்தான் அதன் இறுதி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். அப்போது இந்தியாவுக்கான இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
காட்சி - 3
இந்தியா - 3 போட்டிகளில் 4 புள்ளிகள்
இலங்கை - 3 போட்டிகளில் 4 புள்ளிகள்
பாகிஸ்தான் - 3 போட்டிகளில் 2 புள்ளிகள்
ஆப்கானிஸ்தான் - 3 போட்டிகளில் 2 புள்ளிகள்
இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தோற்றால், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.
எஞ்சியிருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அல்லது பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்றும், வருகிற வியாழக்கிழமை அன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. அப்படி நடந்தால், டை-பிரேக்கை தீர்மானிக்க நிகர ரன் ரேட் (நெட் ரன் ரேட்) மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்.
காட்சி 4
பாகிஸ்தான் - 6 புள்ளிகள்
இந்தியா - 2 புள்ளிகள்
இலங்கை - 2 புள்ளிகள்
ஆப்கானிஸ்தான் - 2 புள்ளிகள்
காட்சி 5
இலங்கை - 6 புள்ளிகள்
இந்தியா - 2 புள்ளிகள்
பாகிஸ்தான் 2 புள்ளிகள்
ஆப்கானிஸ்தான் - 2 புள்ளிகள்
இன்று இந்தியா இலங்கையிடம் தோற்றால், நாளை புதன்கிழமை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், மேற்கூறிய காட்சிகள் எதுவும் ஒத்துப்போகாது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.