Indian Cricket Team | Rahul Dravid | BCCI: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What BCCI wants from Team India’s new coach
இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்றும், தற்போதைய பயிற்சியாளர் டிராவிட் விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் தெரிவித்தார்.
அதன்படி, நேற்று திங்கள்கிழமை இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "முன்னணி வீரர்களைக் கையாள்வதில் தொடர்புடைய வேலை எதிர்பார்ப்புகளையும் அழுத்தங்களையும் பூர்த்தி செய்ய தயாராக இருக்க வேண்டும். உலகத் தரம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்க உதவ வேண்டும். அனைத்து நிலைகளிலும் மற்றும் ஃபார்மெட்டுகளிலும் அணிக்கு நிலையான வெற்றியை வழங்க வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் மற்றும் பங்குதாரர்களின் விளையாட்டுக்கான அணுகுமுறையால் ஊக்கமடைய வேண்டும்" உள்ளிட்ட எதிர்பார்ப்புகளை வெளியிட்டு உள்ளது பி.சி.சி.ஐ.
புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான காலக்கெடு மே 27 ஆகும். அதாவது, ஐ.பி.எல் 2024 இறுதிப் போட்டிக்கு மறுநாள் ஆகும். பி.சி.சி.ஐ-யின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பங்குக்கான கால அளவு ஜூலை 2024 இல் தொடங்கி டிசம்பர் 31, 2027 வரை, அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை ஆண்டு வரை பதவி நீடிக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட், 2020 தொடருக்கான டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு 2021 நவம்பரில் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரின் இந்திய ஆடவர் அணியுடனான ஆரம்ப ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது, ஆனால் அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டில் இரண்டு இறுதிப் போட்டிகளின் போது டிரஸ்ஸிங் ரூமை வழிநடத்திய போதிலும், டிராவிட் தலைமையிலான இந்தியா 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளின் தேடலை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்திய அணி கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் வென்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில், ஜூன் 5 ஆம் தேதி நியூயார்க்கில் அயர்லாந்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி களமாடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.