Advertisment

ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் பி.சி.சி.ஐ ஒப்பந்தம் ரத்து: இருவரும் எதிகொள்ள போகும் மாற்றங்கள் என்ன?

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்கு பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில், அவர்களின் எதிர்கால கிரிக்கெட் பயணத்தில் நிகழவிருக்கும் மாற்றங்கள்.

author-image
WebDesk
New Update
What changes for Shreyas Iyer and Ishan Kishan after BCCI contract snub in tamil

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் ஒப்பந்தத்தை ரத்து செய்த பி.சி.சி.ஐ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ishan Kishan | Shreyas Iyer | Bcci: இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) 2023-24 சீசனுக்கான (அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை) மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 30 வீரர்களை நேற்று புதன்கிழமை அறிவித்தது. இந்த ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

இந்த இரு வீரர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் முன்னணி வீரர்களாக இருந்து வரும் நிலையில், அவர்களை அணி நிர்வாகம் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பாப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரஞ்சி கோப்பையில் விளையாடும் படி கேட்டுக் கொண்ட பி.சி.சி.ஐ - யின் வேண்டுகோளை மதிக்காமல் செயல்பட்டதாக கூறி அவர்கள் இருவரையும் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அதன் மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதால் அவர்களின் எதிர்கால கிரிக்கெட் பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் ஐ.பி.எல் ஏலத்திற்கு முன் அந்தந்த அணிகளால் தக்கவைக்கப்பட்டனர். இது அவர்கள் 2024 ஐ.பி.எல் தொடரில் அந்தந்த அணிகளில் விளையாடுவார்கள் என்பது உறுதிப்படுத்துகிறது. 

முன்னணி வீரர்களுக்கு ஐ.பி.எல் ஒப்பந்தம் என்பது மிகவும் லாபகரமானவை. ஆனால், அதற்காக ஒரு வீரர் பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தை தவறவிடுவது நிதி ரீதியாகவும், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

அவர்களால் இந்திய அணிக்காக விளையாட முடியாவிட்டால், அது அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை மறுக்கிறது. ஐ.பி.எல் என்பது ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும் உள்நாட்டு கிரிக்கெட், வீரர்களின் வளர்ச்சிக்கு மையமாக இருந்தாலும், பல கண்களை ஈர்க்கவில்லை.

இது மற்ற போட்டியாளர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்குப் பதிலாக தங்கள் உரிமையை நிலைநிறுத்திக் கொள்ளவும், தங்கள் இடங்களை உறுதிப்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது. மேலும், இந்திய அணியில் இடம் பிடிக்கும் விதமான போட்டியால், பார்வைக்கு வெளியே என்பது பெரும்பாலும் மனதை விட்டு நீங்கும். 

தேர்வுக் குழுவின் பரிந்துரையின் விளைவாக ஒப்பந்தப் பட்டியலிலிருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுவதால், இரண்டு வீரர்களும் தங்கள் பெயர்களை மீண்டும் மீட்டெடுக்க அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டியிருக்கும்.

ஸ்ரேயாசும், இஷான் கிஷனும் இன்னும் தவறவிடக்கூடிய சிலவையும் உள்ளன. தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) உள்ளிட்ட பி.சி.சி.ஐ அமைத்து கொடுக்கும் வசதிகளை மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு கிரிக்கெட் வீரர் காயம் அடைந்தால், அணிக்கு வெளியே அல்லது அவரது விளையாட்டு அல்லது உடற்தகுதியில் வெறுமனே வேலை செய்ய விரும்பும் போது இது முக்கியமானதாக இருக்கிறது. இந்திய அணியில் இல்லாதவர்கள் என்.சி.ஏ-வின் வசதிகளைப் பெற அந்தந்த மாநில சங்கங்கள் வழியாகச் செல்ல வேண்டி இருக்கும். 

பி.சி.சி.ஐ-யால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரருக்கு விரிவான காப்பீடும் உள்ளது. எனவே, 50 ஓவர் உலகக் கோப்பையில் முகமது ஷமியின் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, இந்தியாவுக்காக விளையாடும்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐ.பி.எல்-லில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு அந்த நிதி இழப்பை பி.சி.சி.ஐ ஈடு செய்யப்படும். அத்துடன் அவரது மருத்துவச் செலவையும் இந்திய அணி நிர்வாகமே பார்த்துக்கொள்ளும்.

பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்த வீரர்களின் பட்டியல்:

கிரேடு ஏ+ (ரூ. 7 கோடி): ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.

கிரேடு ஏ (ரூ. 5 கோடி): ஆர் அஷ்வின், முகமது. ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா.

கிரேடு பி (ரூ 3 கோடி): சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

கிரேடு சி (ரூ. 1 கோடி): ரின்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.

வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்கள்: ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா.

ஆங்கிலத்தில் படிக்கவும்: What changes for Shreyas Iyer and Ishan Kishan after BCCI contract snub?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Shreyas Iyer Bcci Ishan Kishan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment