Advertisment

5-வது முறை சாம்பியன்... வெற்றிக்கு பிறகு டிரஸ்ஸிங் ரூமில் தோனி கூறியது என்ன?

இளம் வீரர்கள் சிவம் துபே மற்றும் துஷார் தேஷ்பாண்டே இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டங்களில் தோனி தங்களுக்கு எவ்வாறு வழிகாட்டினார் என்பது குறித்து பேசியுள்ளனர்

author-image
WebDesk
New Update
CSK Dhoni

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி

16-வது ஐபிஎல் கிரிகெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகுடம் சூடியுள்ள நிலையில் வெற்றிக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் தோனி வீரர்களிடம் என்ன சொன்னார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்தியாவில் நடைபெறும் மிகபெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி கடந்த மே 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

publive-image

இந்த வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமியில் தோனி என்ன மாதிரியான அறிவுரை வழங்குவார் வீரர்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்த விரர்களின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷிவம் டூபே 35 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய டூபேவை ரசிகர்கள் கேலி செய்த நிலையில், வேகப்பந்து வேகப்பந்துவீச்சு மற்றும் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள முடியாது, சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவச்சில் அவர் திணறுகிறார் என்று ட்ரோல் செய்து வந்தனர்.

ஆனால் ஒருசில போட்டிகளுக்கு பின் ஷிவம் டூபே சிக்சர் டூபே என்று சொல்லும் அளவுக்கு அதிரடியாக விளையாடி அசத்தினார். இதற்கு முக்கிய காரணம் கேப்டன் தோனித்தான். அதேபோல் ஆரம்பகட்ட போட்டிகளில் சொதப்பிய வேக்கப்பந்துவீச்சாளர் துஷார்தேஷ் பாண்டே இறுதியாக 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். தொடக்கத்தில் திணறினாலும் தோனியின் அறிவுரைதான் சிறப்பாக ஆட்டத்திற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து ஷிவம் டூபே கூறுகையில்,  “மஹி பாய் எனக்கு தெளிவாக சிந்தனையை கொடுத்தார். என்னுடைய பங்கு என்ன என்று புரிய வைத்தார். அவரின் அறிவுரைப்படி ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கி விரைவில் ஆட்டமிழந்தாலும், எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக முடிக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் ஷிவம் டூபேவின் ஸ்ட்ரைக் ரேட் 158.33.

தோனி குறித்து துஷார்தேஷ் பாண்டே கூறுகையில்,

“ஒருமுறை நான் நன்றாக பந்துவீசவில்லை, அப்போது கவலைப்பட வேண்டாம். குழப்பமடைய வேண்டாம் உன்னுடைய திறமையை காட்டு என்று கூறினார். ஒருமுறை மைதானத்தின் தன்மை குறித்து பேசியபோது இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது சாதாரணமானது என்று கூறினார். அவர் பேசும் போது மனம் தெளிவாக இருக்கும். இளம் வீரர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தான் அவர் சொல்வார் என்று கூறியுள்ளார்.

விஷயங்கள் நமக்குச் சாதகமாக நடக்காதபோது ஒரு வழிகாட்டி நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஒரு தன்னலமற்ற நபர் அனைத்தையும் எளிமையாக எடுத்துக்கொள்வார். உங்கள் கெட்ட நேரங்களில் உங்களுடன் இருப்பார். ஒரு ராணுவ வீரரைப் போல அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்வேன். அவர் என்னை ஒருபோதும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரியும். அவரது திட்டங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. ஒருவர் தனது திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக அவருக்கான சுதந்திரமும் கொடுப்பார், தேவைப்படும்போது இதற்கு மேல் நிறை உள்ளது. அமைதியாக இருங்கள், மனதை அமைதியாக வைத்திருப்பது முக்கியம் அப்போதுதான் வெற்றி இலக்கை எட்ட முடியும் என்று சொல்வார் என தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

அதேபோல் தேஷ்பாண்டே பந்துவீசும்போது அடிக்கடி ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனியை பார்த்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்துகொள்வார். அவர் தலையை அசைப்பது, அல்லது கையுறையுடன் கைதட்டல் அல்லது பந்துவீச்சு முறையை மாற்ற சைகை செய்வது உள்ளிட்ட விஷயங்களை கவனித்து அதன்படி பந்துவீசுவார். தோனியின் இந்த சிறிய விஷயங்கள் அனைத்தும், தேஷ்பாண்டே போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் மிகப்பெரிய மதிப்பைக் பெற்றுள்ளது.

அதேபோல் இறுதிப்போட்டியில் சுப்மான் கில் கேட்சை மிஸ் செய்த தீபக் சஹார் போட்டியின் முடிவில் ஆட்டோஃகிராப் கேட்கும்போது காமெடியாக உனக்கு எதுவும் கிடையாது என்பது போல் சைகை காண்பித்து அதன்பிறகு ஜெர்சியில் ஆட்டோஃகிராப் போட்டிருப்பார்.

publive-image

இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பிறகு முடிவில், டிரஸ்ஸிங் ரூமில் தோனி “அனைவருக்கும் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நாம் என்ன செய்தோம், எங்கே தவறு செய்தோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்த சீசனில் இந்த தவறுகளை நிச்சயம் சரி செய்ய வேண்டும். சில மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்த ஆண்டு விளையாடுவதற்கு தன்னால் முடிந்தவரை முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று துஷார்தேஷ் பாண்டே கூறியுள்ளார்.

தோனி இன்னும் ஒரு சீசனில் விளையாடுவார் என்று நம்புகிறோம். அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் எங்களுக்கு அவர் தேவை, அவர் இருந்தால் தான் நாங்கள் அவருக்கு கீழ் வளர முடியும் என்று ஷிவம் டூபே தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment