பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்க நிமிடங்களிலேயே அர்ஜென்டினா 2 கோல் அடித்து முன்னிலை வகித்தது. பிரான்ஸ் வீரர்கள் எந்த கோலும் அடிக்க முடியாமல் தடுமாறின, முதல் பாதியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வலுவான முன்னிலையை எட்டியது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணி முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்காதது இதுவே முதல் முறையாகும்.
இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க பிரான்ஸ் வீரர்கள் தீவிரம் காட்டினர். பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அடுத்தடுத்து 2 கோல்கள் அடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். பின்னர் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இரு அணிகளுக்கும் 4 வாய்ப்புகள் வழங்கப்பட்டதில் அர்ஜென்டினா 4 கோல் அடித்து அபார வெற்றி பெற்றது. பிரான்ஸ் 2 கோல்கள் அடித்தது. இதையடுத்து 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பிஷ்ட் ஆடை
இந்நிலையில், து அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பையை பெறும்போது அர்ஜென்டினாவின் வெள்ளை மற்றும் ப்ளு நிற ஜெர்சியின் மேல் கருப்பு அங்கி அணிந்திருந்தார். இது என்ன என்பது குறித்து பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. பிஃபா உலகக் கோப்பையை கத்தார் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி மெஸ்ஸியிடம் வழங்குவதற்கு முன் 'பிஷ்ட்' (Bisht) எனப்படும் ஆடையை அணியச் செய்தார்.
பிஷ்ட் என்பது அரேபிய நாடுகளில் சிறப்பு நிகழ்வுகளின் போது அணியப்படும் ஆடையாகும். ஒட்டகத்தின் முடி மற்றும் ஆட்டின் கம்பளி கொண்டு செய்யப்பட்ட அங்கியாகும். அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், மதத் தலைவர்கள் அணியும் ஒரு ஆடை ஆகும். தலைசிறந்த கால்பந்து வீரர் கத்தாரில் உலகக் கோப்பை வென்றது பெருமைமிகு தருணமாக கத்தார் பார்க்கிறது.
ஜெர்சியில் மூன்று நட்சத்திரங்கள்
இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து வீரராகவும், வரலாற்றில் இடம்பிடிக்கும் சிறந்தவராகவும் இருக்கும் மெஸ்ஸி கத்தாரின் பாரம்பரிய ஆடை அணிந்தது பெருமைமிகு தருணமாக பார்க்கப்படுகிறது. மெஸ்ஸிக்கு பிஷ்ட் ஆடை வழங்கும்போது பிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவும் உடன் இருந்தார்.
இருப்பினும், கோப்பை பெற்று குழு புகைப்படம் எடுக்கப்பட்டப்பின் மெஸ்ஸி பிஷ்ட் இல்லாமல் காணப்பட்டார். இப்போது அர்ஜென்டினா ஜெர்சியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும்படி அணிந்திருந்தார். 1978, 1986 மற்றும் 2022 சாம்பியன் பட்டம் வென்றதை குறிப்பதாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/