ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு அறிவிப்பை இப்போது வெளியிட்டு இருக்கலாம். ஆனால் அது நீண்டகாலமாக பேசப்பட்ட ஒன்றாகும். 2023 இல் சொந்த மண்ணில் நடந்த கடைசி பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது, அந்தப் பேச்சு முதன்முதலில் அடிபட்டது. ஆனால் மற்றொரு தொடருக்கான அழைப்பு வந்தபோது, குறிப்பாக தாமதமாக சிக்கலை ஏற்படுத்திய முழங்கால் காரணமாக அஸ்வின் தனது மனதை உறுதி செய்ததாகத் தெரிகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What made Ravichandran Ashwin retire in the middle of the Border-Gavaskar series?
டெஸ்ட் தொடருக்காக அஸ்வின் ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசிப்பதாக அவர் தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். அப்போது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அதை யோசிக்குமாறு அவரது குடும்பத்தினர் அவரிடம் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து தனது ஓய்வு முடிவை எடுப்பதாக அஸ்வின் தனது குடும்பத்தினரிடம் கூறியதாக தெரிகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, டிசம்பர் 18 சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி நாள் என்று அவர் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார் அஸ்வின்.
கேப்டன் ரோகித் ஷர்மா பெர்த்தில் தரையிறங்கியபோது கூறியது போல், அடிலெய்டில் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்பு அஸ்வின் விலகுவது பற்றி நீண்ட நேரம் பேசினார். அவர் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடுவதற்கான போட்டியில் இருந்தார், ஆனால் ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கபாவில், அஸ்வின் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாகத் தொடரின் நடுவில் விலகுவதற்கான தனது முடிவைப் பற்றித் தெரிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. அஸ்வினுக்கு மெல்போர்ன் மற்றும் சிட்னியில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், தற்போது அந்த அணி எங்கு செல்கிறது என்பதை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜடேஜா பிரிஸ்பேன் மைதானத்தில் சிறப்பாக விளையாடினார். அஸ்வினுக்குப் பதில் இந்திய அணியில் மற்றொரு ஆஃப் ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார், அவர் முற்றிலும் வித்தியாசமானவராக இருந்தாலும், அஸ்வினிடம் இருந்து பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறார்.
இன்னும் இரண்டு வருடங்கள்
38 வயதில், வங்கதேச அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் தொடரின் நாயகன் விருதை வென்றார். அதனால், அஸ்வின் இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் தொடர்ந்து ஆடுவார் எனத் தோன்றியது. ஆனால், அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்கிற உறுதிப்பாடுகள் இல்லாததாலும், குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் அவர் முதன்மையான வீரராக இல்லாததாலும், அவரது முழங்காலில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதாலும், அஸ்வின் முதல் முறையாக ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொண்டு, 18 மாதங்களுக்குப் பிறகு அதனை அறிவித்துள்ளார்.
அஸ்வின் நாளை வியாழன் அன்று தாயகம் திரும்ப உள்ளார், மேலும் அவர் இன்னும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு வலுவான வாய்ப்பு இருப்பதாக அவர் வெளிப்படுத்தினார். கடந்த காலங்களில், ரஞ்சி கோப்பையை வெல்வது என்பது நிறைவேறக் காத்திருக்கும் கனவு என்றும், தமிழ்நாடு இன்னும் பிளே-ஆஃப்களுக்கான தேடலில் இருப்பதால், அவர் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார். ஐ.பி.எல்- லில் அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து இருப்பதால், அவருக்கு முறையான பிரியாவிடை கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“