IND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா? கவலை வேண்டாம்

India vs West Indies ODI Cricket Match LIVE Streaming: ரிஷப் பண்ட்டின் வருகை, தோனியின் பேட்டிங் பிரஷரை நிச்சயம் குறைக்கும். தோனியின் முக்கால்வாசி...

IND v WI LIVE Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று குவஹாத்தியில் நடைபெறுகிறது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி குவஹாத்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி(வி.கீ), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, கலீல் அஹ்மது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டியின் மூலம் ரிஷப் பண்ட் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அடியெடுத்து வைக்கிறார். ரிஷப் பண்ட்டின் வருகை அணிக்கு லாபமோ இல்லையோ, தோனிக்கு பெரிய பிளஸ் என்று கூறலாம்.

ஏனெனில், தல தோனி தனது ஃபார்மில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். 30 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் கொஞ்சம் ஜெர்க் ஆகிறார். எனினும் அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் அனுபவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.

ரிஷப் பண்ட்டின் வருகை, தோனியின் பேட்டிங் பிரஷரை நிச்சயம் குறைக்கும். தோனியின் முக்கால்வாசி ரோலை பண்ட் எடுத்துக் கொள்வார் என்பது உறுதி.

மதியம் 1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரண்டு மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. லைவ் கவரேஜ் 1 மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிடும்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி சேனல்களில் போட்டி லைவ் செய்யப்படுகிறது. அதுதவிர இதன் HD சேனலிலும் போட்டி ஒளிபரப்பாகிறது. இணையதளத்தில் ஹாட்ஸ்டாரில் போட்டியை கண்டுகளிக்கலாம்.

இதுதவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நீங்கள் உடனுக்குடன் காணலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close