2017ல் விராட் கோலியை நோட்புக் ஸ்டைலில் வழியனுப்பிய வில்லியம்சன்! இதுக்குதானா இந்த கும்மாங்குத்து (வீடியோ)

வெஸ்ட் இண்டீசுக்கு ஒரு பலமான வரவேற்பை கொடுத்திருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 208 எனும் டார்கெட்டை அவ்வளவு எளிதில் 18.4வது ஓவரிலேயே எட்டியிருக்க முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. ஏன் கேப்டன் கோலி கூட… ஆனால், அவரது ‘ஸ்லோ, ஸ்டெடி, சும்மா கிழி’ கான்செப்ட்டால், வெஸ்ட் இண்டீஸின் வெற்றி நம்பிக்கையை தகர்த்துவிட்டார். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் மொத்தமாக 3.4 ஓவர்கள் பவுல் செய்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 60 ரன்கள் […]

When Kesrick Williams’ gave notebook send-off to Virat Kohli during Jamaica T20I in 2017 - 2017ல் கோலிக்கு நோட்புக் ஸ்டைலில் வழியனுப்பிய வில்லியம்சன் - வீடியோ! இதுக்குதானா இந்த கும்மாங்குத்து
When Kesrick Williams’ gave notebook send-off to Virat Kohli during Jamaica T20I in 2017 – 2017ல் கோலிக்கு நோட்புக் ஸ்டைலில் வழியனுப்பிய வில்லியம்சன் – வீடியோ! இதுக்குதானா இந்த கும்மாங்குத்து

வெஸ்ட் இண்டீசுக்கு ஒரு பலமான வரவேற்பை கொடுத்திருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 208 எனும் டார்கெட்டை அவ்வளவு எளிதில் 18.4வது ஓவரிலேயே எட்டியிருக்க முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. ஏன் கேப்டன் கோலி கூட…

ஆனால், அவரது ‘ஸ்லோ, ஸ்டெடி, சும்மா கிழி’ கான்செப்ட்டால், வெஸ்ட் இண்டீஸின் வெற்றி நம்பிக்கையை தகர்த்துவிட்டார்.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் மொத்தமாக 3.4 ஓவர்கள் பவுல் செய்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார்.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் நிகிதா மில்லர், கார்லஸ் பிராத்வெயிட், ஒசேன் தாமஸ் ஆகியோர் 56 ரன்கள் வழங்கியதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனைகளை வில்லியம்சன் தற்போது தகர்த்து இருக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற பல பல சேஸிங்களை விராட் கோலி அசால்ட் செய்திருந்தாலும், நேற்று வில்லியம்ஸ் பந்தில் அவர் சிக்சர் பிறகு இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் ரொம்ப ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார்.

கோலி சிக்சரை அப்படி கொண்டாட காரணம் சாட்சாத் வில்லியம்சன் தான்.


வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் எப்போதும் விக்கெட் கைப்பற்றியவுடன், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து நோட்புக்கை எடுத்து அதை டிக் செய்வது போல கொண்டாடுவார்.

கடந்த 2017இல் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது, ஜமைக்காவில் நடந்த டி-20 போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியவுடன், தனது நோட்புக் ஸ்டைலில் கோலிக்கு வழியனுப்பினார்.


அதை இரண்டு ஆண்டுக்கு பின்னும் மறக்காத கோலி, நேற்று அவரது ஸ்டைலிலேயே அவருக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த கொண்டாட்டம் குறித்து போட்டிக்கு பின் கேப்டன் கோலி கூறுகையில், “ஜமைக்காவில் அவுட்டாக்கிய பின் வில்லியம்ஸ் என்னை அப்படி வழியனுப்பினார்.


அதனால் நானும் அவரின் நோட்புக்கில் சில டிக்குகளை பதிவு செய்ய நினைத்தேன். எல்லாம் நல்லதுக்கு தான். களத்தில் சில வார்த்தைகள் காரசாரமாக இருந்தாலும் இறுதியில் வேடிக்கையாக இருந்தது. இந்த ஆரோக்கியமான போட்டி கிரிக்கெட்டுக்கு நல்லது தான். களத்தில் கடினமாக விளையாட வேண்டும், அதே நேரம் எப்போதும் எதிரணிக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என்றார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: When kesrick williams gave notebook send off to virat kohli during jamaica t20i in

Next Story
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூ 225 கோடி சூதாட்டம்: பிசிசிஐ விசாரணையில் அம்பலம்225 crore bets on a TNPL match
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X