யார் இந்த லுவானா அலோன்சோ?
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறிய லுவானா அலோன்சோ என்கிற வீராங்கனை ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். அவர் நாடு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், தனது சொந்த நாடு திரும்பிய லுவானா அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பது வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் பாதிப்பையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்துவதாகவும், சக வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த லுவானா அலோன்சோ?
இந்தச் சம்பவம் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ குறித்து சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் என்ன? என்பது தொடர்பாக கூகுளில் அதிகம் தேடப்பட்டு வருகிறார்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
இந்த நிலையில், நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ குறித்து இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம். செப்டம்பர் 19, 2004 இல் பிறந்த 20 வயதான நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சோ, பராகுவே நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் பட்டர்ஃபிளை ஸ்ட்ரோக் நீச்சல் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்றவர். 100 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டியில் பராகுவேயில் தேசிய சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
லுவானா அலோன்சோ தற்போது அமெரிக்க டல்லாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக உள்ளார். பல்கலைக்கழகத்தின் பெண்கள் நீச்சல் மற்றும் டைவிங் குழுவுடன் அவர் பணியாற்றுவதற்கு முன்பு, அவர் ஒரு செமஸ்டர் வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
தனது 17 வயதில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது நாட்டை முதன்முதலில் பிரதிநிதித்துவப்படுத்தியதன் அவர் வெளியுலகிற்கு அறிமுகமானார். அந்தப் போட்டியில், அவர் 28 வது இடத்தைப் பிடித்தார். அதனால், அரையிறுதி வாய்ப்பை தவற விட்டார். தற்போது நடந்து வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், அவர் இரண்டாவது முறையாக களமாடிய நிலையில், தகுதி சுற்றில் (ஹீட்ஸ்) அவர் 6-வது இடத்தைப் பிடித்தார். இதற்கு முன், யூத் ஒலிம்பிக், தென் அமெரிக்க விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, 2024 ஒலிம்பிக்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த அலோன்சோ விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த ஒலிம்பிக்கிற்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவில் அவர் பராகுவேயை விட அமெரிக்காவையே தான் அதிகம் விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது.
யார் இந்த லுவானா அலோன்சோ?
அலோன்சோ தனது பராகுவேய அணியினரை ஆதரிப்பதற்குப் பதிலாக டிஸ்னிலேண்டில் தனது நேரத்தைச் செலவிட்டதாக பல உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தி டெய்லி மெயிலில் வெளியான செய்தியின் படி, அவர் தனது "குறைவான ஆடை மற்றும் பிற விளையாட்டு வீரர்களுடன் பழகுவது" போன்றவற்றால் ஒலிம்பிக் போட்டிகளில் மற்ற போட்டியாளர்களுக்கு கவனத்தை சிதறடித்துள்ளார்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
இன்ஸ்டாகிராமில் 8,98,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட அலோன்சோ, தனக்கு எதிராக கூறப்பட்டவை அனைத்தும் பொய்யானவை என்று கூறியிருக்கிறார்.
யார் இந்த லுவானா அலோன்சோ?
"நான் ஒருபோதும் வெளியேற்றப்படவில்லை அல்லது எங்கும் வெளியேற்றப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவுசெய்து தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள். நான் எந்த அறிக்கையையும் வெளியிட விரும்பவில்லை, ஆனால் பொய்கள் என்னை பாதிக்க விடமாட்டேன். இது எனது கடைசிப் போட்டி. நான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" என்று லுவானா அலோன்சோ வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.