India vs Zimbabwe, Zimbabwe tour of India Tamil News: ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு மோதும் முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 18 ஆம் தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. இத்தொடருக்காக கடந்த சனிக்கிழமை ஹராரே நகரை அடைந்த இந்திய வீரர்கள், நேற்று முன்தினம் முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 12 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட அறிவிப்பில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்றும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்தது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கே.எல்.ராகுல் வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஆபரேஷன் செய்தார். அதிலிருந்து அவர் குணமடைந்தாலும், கொரோனா தொற்றில் சிக்கியதால் மேலும் இரு வாரங்கள் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல்தகுதியை எட்டியுள்ள நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக இணைந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: Ind vs Zim 1st ODI: கேப்டனாக ராகுல்… தேதி, நேரலை ஒளிபரப்பு, முழு அட்டவணை
சுந்தருக்கு காயம்
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஆல் ரவுண்டர் வீரர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் களமிறங்கும் போது அவருக்கு இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக, தற்போது இந்திய அணியில் ஷாபாஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் சுந்தர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.
இதையும் படியுங்கள்: Ind vs Zim 1st ODI: கேப்டனாக ராகுல்… தேதி, நேரலை ஒளிபரப்பு, முழு அட்டவணை
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் யார்?
பிசிசிஐ கடந்த ஜூலை 30-ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் இந்திய அணியை அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பில் மூத்த வீரர் தவான் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. அந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் சுப்மான் கில் இடம்பிடித்து இருந்தார். அதனால், அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடக்க வீரர் தவானுடன் இணைந்து விளையாடியது போல், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இளம் வீரர் சுப்மான் கில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில், 3 ஆட்டத்தில் 2 அரைசதம் உள்பட மொத்தம் (64, 43, 98) 205 ரன்கள் எடுத்து தொடர்நாயகனாக ஜொலித்து இருந்தார். மேலும், தவானுடன் ஜோடி சேர்ந்து அணிக்கு மிகச்சிறப்பான தொடக்கம் கொடுத்ததோடு, வலுவான பார்ட்னர்ஷிப்பையும் அமைத்திருந்தார். ஆனால் ஜிம்பாப்வே தொடரில், அவரை தொடக்க வரிசையில் இருந்து மாற்ற வேண்டிய நிலைமை உள்ளது.

ஏன்னென்றால், அணியின் கேப்டனாக தொடக்க வீரர் ராகுல் வருகை தந்திருப்பதால் அவர் மூத்த வீரர் தவானுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது. இதனால் சுப்மான் கில் 3-வது வரிசையில் தான் களம் காண வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் தேசிய தேர்வாளரும், டெஸ்ட் தொடக்க வீரருமான தேவாங் காந்தி கூறும்போது, “இந்திய அணி நிர்வாகத்தால் சுப்மான் சரியான முறையில் வளர்த் தெடுக்கப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். கரீபியன் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்பட்டாலும், பல இடங்களுக்கு வீரர்களைத் தயார்படுத்துவதே இந்த அணியின் தத்துவத்தில் இருந்து என்னால் அறிய முடிகிறது. எனவே இந்தக் குறிப்பை நான் உணர்கிறேன். ஜிம்பாப்வே தொடரில், அவர் நம்பர். 3-ல் வர வேண்டியிருக்கும் என்றும் நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“இவ்வளவு சிறப்பான தொடரை நீங்கள் பெற்ற பிறகு, அந்த இடத்தில் மீண்டும் களமிறங்குவது கடினம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தற்போது, ஆசிய கோப்பை டி20யின் தொடக்க ஆட்டத்திற்கு ராகுலை தயார்படுத்துவதே அணி நிர்வாகத்தின் நோக்கமாக இருக்கும். அவருக்கு நிறைய பேட்டிங் நேரம் தேவை, அதுதான் தற்போதைய முன்னுரிமையாகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படியுங்கள்: Ind vs Zim 1st ODI: கேப்டனாக ராகுல்… தேதி, நேரலை ஒளிபரப்பு, முழு அட்டவணை
சுப்மான் கில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடக்க வீரராக வருவார் என நான் கருதுவதால் இது குறுகிய கால ஏற்பாடாக இருக்கும்” என்று ‘தி ஹன்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யும் இந்திய முன்னாள் வீரர் தீப் தாஸ் குப்தா கூறியுள்ளார்.
கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் மிடில் ஆர்டரில் களமாடி இருந்தார். ஆனால் அவர் தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, அந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார். ஆனால், ராகுல் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அகமதாபாத்தில் நடந்தது. அதில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தவான் இருவருடனும், ராகுல் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார்.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் தீப் தாஸ் குப்தா பேசுகையில், “பாருங்கள், நம்பர்.3 என்பது ஒரு சரியான டாப்-ஆர்டர் ஸ்லாட். சுப்மான் இன்னிங்ஸின் இரண்டாவது பந்தில் கூட சீக்கிரமாக களத்திற்குள் வர வேண்டியிருக்கும். அது அவர் தொடக்க வீரராக பேட்டிங் செய்ய சிறப்பாக இருக்கும். ராகுல் கேப்டனாக இருக்கும் ஆட்டத்தில் அவருக்கு போதுமான ஆட்ட நேரம் கிடைத்தால் போதும் என்பது என் எண்ணம். பிறகு, அவர் மீண்டும் மிடில் ஆர்டரில் பேட் செய்வார். கில்லை பொறுத்தவரை அவர் 2023ல் நடக்கும் தொடர்களுக்கு தயாராகிறார்,” என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: Ind vs Zim 1st ODI: கேப்டனாக ராகுல்… தேதி, நேரலை ஒளிபரப்பு, முழு அட்டவணை
ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.
ஜிம்பாப்வே அணி:
ரியான் பர்ல், ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), தனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே என்சரா, டோனிசரா நகர்வானி, ஜான்னிசரா நகர்வானி, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ.
இதையும் படியுங்கள்: Ind vs Zim 1st ODI: கேப்டனாக ராகுல்… தேதி, நேரலை ஒளிபரப்பு, முழு அட்டவணை
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil