58 நாட்கள், 73 போட்டிகள் மற்றும் 12 மைதானங்களுக்குப் பிறகு நாம் தொடங்கிய அதே இடத்தில் இருக்கிறோம். ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இடையேயான சீசன் தொடக்க ஆட்டத்தை பிரதிபலிக்கிறது. MS தோனியின் தரப்பு அந்த முதல் போட்டியின் முடிவு மாறும் என்று நம்புகிறது, முதல் போட்டியில் சி.எஸ்.கே அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
மறுபுறம், 15 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே.,யிடம் தோல்வியடைந்த ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது ஆட்களின் மனதில் குவாலிஃபையர்-1 இன் காயங்கள் இன்னும் பசுமையாக இருக்கும். ஏனெனில், வெள்ளிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோது தோல்வியின் கோபத்தை உணர முடிந்தது. சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் எந்த நாளிலும் எந்த அணியையும் வெல்ல முடியும் என்பதை இந்த வெற்றி மீண்டும் உணர்த்தியது.
இதையும் படியுங்கள்: ‘குஜராத் கை ஓங்கும், ஆனா கோப்பையில் சி.எஸ்.கே கை தான் இருக்கும்’: கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து
சென்னை சேப்பாக்கத்தின் நிலைமைகளுக்கு நன்கு பொருத்தப்பட்டிருந்ததால், சென்னைக்கு தெளிவான நன்மை கிடைத்தது. அன்றைய ஆட்டத்தில் 172 ரன்களை தற்காத்துக் கொண்ட போது, மேற்பரப்பு வேகத்தை குறைத்த சென்னை ஸ்பின்னர்கள் ஆட்டத்திற்குள் வந்து குஜராத் டைட்டனின் மிடில் ஆர்டரை சிதைத்தனர். இருப்பினும், நிலைமைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதால், சி.எஸ்.கே அணி வீரர்கள் அகமதாபாத்தில் அதே சாதகத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள்.
முந்தைய ஆட்டங்களின் அடிப்படையில், இங்கே கேம் தீர்மானிக்கப்படலாம்:
புதிய பந்து மந்திரங்கள்
இந்த மைதானத்தில் பவர்பிளேயில் 26 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முகமது ஷமி இருந்தால், சென்னை அணிக்கு தீபக் சாஹர் இருக்கிறார்; தங்கள் சூழ்நிலைகளை சாதகமாக அமையும்போது இருவரும் சமமான ஆபத்தான பந்துவீச்சாளர்கள்.
சாஹர் புதிய பந்தைக் கொண்டு விக்கெட் வீழ்த்துவதில் சிறந்தவர். இந்த சீசனில் அவர் எடுத்த 12 விக்கெட்டுகளில் 10 விக்கெட்டுகள் பவர்பிளேயில் ஒன்பது ஆட்டங்கள் மூலம் கிடைத்தவை. மேலும் இந்த சீசனில் வெறித்தனமாக விளையாடி வரும் ஷுப்மான் கில் மீது சி.எஸ்.கே தனிகவனம் செலுத்தி, அவரது விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டும். சாஹர் விரைவாக கில் விக்கெட்டை வீழ்த்தினால், அவரை பெரிதும் நம்பியிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் அவர்களின் ஆறுதல் போர்வையின்றி விளையாடி இன்னிங்ஸை வித்தியாசமாக அணுக வேண்டியிருக்கும்.
அதேபோல் ஷமியும் புதிய பந்தில் ஜாலியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இந்த சீசனில் பவர்பிளேயில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் இந்த சீசனில் 55.35 சராசரியுடன் 775 ரன்களை பங்களித்துள்ளனர் மற்றும் ஓவருக்கு 8.82 ரன்களை விளாசியுள்ளனர். இந்த சீசனில் அணியின் ரன்களில் 45.47 ரன்களுக்கு அவர்கள் பங்களித்துள்ளனர். இந்தக் கூட்டாண்மையை உடைப்பது சென்னை அணியை பின்னுக்குத் தள்ளலாம் மற்றும் சீரற்ற மிடில் ஆர்டரை அம்பலப்படுத்தலாம்.
ரவீந்திர ஜடேஜா vs குஜராத்தின் பலம் வாய்ந்த வலது கை பேட்டிங்
குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் இடது கை சுழற்பந்து வீச்சால் 10 விக்கெட்டுகளை இழந்து 7.00 ரன்களை எடுத்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்றில், ஜடேஜா, மிடில் ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, ரன் வேட்டையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதுகை உடைத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் வரிசையில் வலது கை வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மைதான மேற்பரப்பைப் பொருட்படுத்தாமல் இந்த ஆண்டு புத்திசாலித்தனமாக இருக்கும் ஜடேஜாவை எதிர்கொள்வது அவர்களுக்கு மீண்டும் சவாலாக இருக்கலாம். தனது ஐ.பி.எல் வாழ்க்கையில் பந்து வீச்சுடன் கூடிய நட்சத்திர ஆல்ரவுண்டருக்கு இது சிறந்த சீசனாகும். அவர் மிடில் ஓவர்களில் தோனிக்கு மிகவும் நம்பகமான பந்துவீச்சாளாராக உள்ளார். 7.42 என்ற கஞ்சத்தனமான ரன்களை மட்டும் கொடுத்து 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
முந்தைய ஆட்டத்தில் சாய் சுதர்சனின் அறிமுகம் ஒரு இடது கை ஆட்டக்காரரை வரிசையில் முதலிடத்தில் சேர்த்தாலும், சுவாரஸ்யமாக, அவர் இந்த சீசனில் இடது கை சுழலுக்கு எதிராக 103.57 ரன்களில் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்க பவர்-ஹிட்டர் டேவிட் மில்லர் இடது கை சுழற்பந்து வீச்சை விளையாடுவதற்கு குறைந்த வாய்ப்புகளை மட்டுமே பெற்றுள்ளார், 109.09 ரன்களில் அடித்து அவர்களால் இரண்டு முறை ஆட்டமிழந்தார். உண்மையில், அவர் முதல் பிளேஆஃப் ஆட்டத்தில் ஜடேஜாவின் சுழலில் விழுந்தார்.
ஜடேஜா மீண்டும் களமிறங்கினால், மிடில் ஓவர் முன்னேற்றங்களை வழங்குவதன் மூலம் போட்டியை சி.எஸ்.கே.,க்கு சாதகமாக மாற்றலாம்.
மோஹித் சர்மா vs மதீஷா பத்திரனா
கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, மோஹித் ஷர்மா அதிக நம்பிக்கையுடன் இருப்பார், மேலும் அவர் ஐ.பி.எல்.,லில் அறிமுகமான தனது முன்னாள் அணிக்கு எதிராக ஒரு புள்ளியை நிரூபிக்க விரும்புவார். பெரும்பாலான ஆட்டங்களில் 10வது ஓவருக்குப் பிறகு, மதீஷா பத்திரனாவைப் போலவே பந்துவீச வந்த ஷர்மா இந்த ஆண்டு 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; அவர் தனது பேக்-ஆஃப்-ஹேண்ட்-மெதுவான பந்துகளால் விக்கெட் வேட்டையாடுகிறார். அவரது திறமைகள் மற்றும் புத்திசாலித்தனத்தால் குஜராத் டைட்டன்ஸ் 9.61 என்ற சிறந்த டெத் பவுலிங்கில் மிரட்டி வருகிறது.
மெதுவான பந்து மோஹித்தின் ஆயுதம் என்றால், பத்திரனாவின் ஆயுதக் களஞ்சியம் கால்விரலை நசுக்கும் யார்க்கர்களால் நிரப்பப்பட்டது. இலங்கை வீரரின் வேகம் மற்றும் துல்லியம் காரணமாக சி.எஸ்.கே இரண்டாவது சிறந்த டெத் பவுலிங் அணி, 9.77 ஆக உள்ளது.
முந்தைய மோதலில் சென்னையில் அவர்கள் நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டனர், ஆனால் அகமதாபாத்தில் பாதுகாப்பது முற்றிலும் மாறுபட்ட சவாலாக இருக்கும். இந்த கட்டத்தில் அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் 11.94 ரன்கள் எடுத்துள்ளது. சி.எஸ்.கே அணியும் 11.52 உடன் நெருக்கத்தில் உள்ளது.
பின்தளத்தில் மோஹித் மற்றும் பத்திரனாவின் பந்துவீச்சு இந்த ஆட்டத்தை எந்த வகையில் மாற்றலாம் என்பது முக்கியமானதாக இருக்கலாம். இந்த சீசனில் இதுவரையிலான புள்ளிவிவரங்களின்படி, குஜராத் டைட்டன்ஸ் இந்த கட்டத்தில் தெளிவான மேலிடம் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.