Kohli vs Gambhir feud: What is the fine and who pays it? Tamil News: ஐ.பி.எல் 2023 டி20 கிரிக்கெட்டில் கடந்த திங்கள் கிழமை லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்குப் பிறகு, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. மைதானத்தில் அவர்கள் இருவரும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு, ஆவேசமாக வார்த்தைகளை உதிர்த்தனர்.
இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டது கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நிலையில், அவர்களது மோதலுக்கு பல முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரித்தனர். சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் போன்ற ஜாம்பவான்கள் வீரர்கள் பி.சி.சி.ஐ விதித்த ‘100% அபராதம்’ போதாது என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, வெவ்வேறு நிலைகளில் குற்றங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் அல்லது நடத்தை மீறலுக்கும் வரையறுக்கப்பட்ட அபராதம் உள்ளது. ஆட்ட நடுவர், கள நடுவர்களுடன் கலந்தாலோசித்து, கோலி மற்றும் கம்பீரின் செயல் ஐபிஎல் நடத்தை விதி 2.21 ஐ மீறுவதாகக் கருதினார். இது "விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அனைத்து வகையான நடத்தைகளை" கொண்டது.
"அறிக்கையை சமர்ப்பிக்கும் நபர் நடத்தையின் தீவிரத்தன்மையின் அளவை தீர்மானிக்க வேண்டும்.", இதில், கோலி மற்றும் கம்பீரின் மீறல் லெவல் 2 இன் கீழ் வரும் என்று போட்டி நடுவர் மற்றும் நடுவர்கள் முடிவு செய்தனர். எனவே, அவர்களுக்கு போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டது. லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், விதி 2.21-ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டது, அவரது குற்றமானது லெவல் 1 எனக் கருதப்பட்டதால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகை எவ்வளவு?
கோலி - கம்பீர் - நவீன்-உல்-ஹக் ஆகியோர் மோதலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அபராதமாக செலுத்தும் தொகை எவ்வளவு? அவர்களின் தொகையை யார் செலுத்துவது என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு அணியில் விளையாடி வரும் கோலி ஆண்டுக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் ஒரு சீசனில் விளையாடும் உத்தரவாதமான 14 போட்டிகளைக் கருத்தில் கொண்டால், அவரது போட்டிக் கட்டணம் சுமார் ரூ1.07 கோடியாக இருக்கும். பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றை எட்டினால், அந்தத் தொகை குறைவாக இருக்கும்.
அபராதம் செலுத்துவது யார்?
இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், அபராதத் தொகை எவ்வளவு இருந்தாலும், கோலி அதைச் செலுத்த மாட்டார். "வீரர்கள் தங்களையே அணிக்காக வைக்கிறார்கள். நாங்கள் அதை மதிக்கிறோம். கலாச்சாரமாக, அவர்களின் சம்பளத்தில் இருந்து அபராதத்தை நாங்கள் குறைக்க மாட்டோம்," என்று பெங்களூரு அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அப்படியென்றால், கோலியின் அபராதத்தை ஆர்.சி.பி அணி நிர்வாகமே செலுத்தும். இது கோலிக்கு மட்டுமல்ல. லீக் முழுவதும் அதன் வீரர்களுக்கு அந்த அணி நிர்வாகமே அபராதம் தொகையை செலுத்தும்.
இதுபோன்று அணி வீரர்களின் அபராத தொகையை செலுத்துவது ஆர்.சி.பி அணி நிர்வாகம் மட்டுமல்ல, ஐ.பி.எல்-லில் பங்கேற்றுள்ள பெரும்பாலான அணிகள் இதே நடைமுறையைத் தான் செயல்பாட்டில் வைத்துள்ளன. அதாவது, வீரர்களின் சம்பளத்தில் இருந்து அபராத தொகையை வசூலிக்காமல், அணி நிர்வாகமே அபராதத்தை செலுத்தி வருகிறார்கள்.
கம்பீரின் அபராதத்தை செலுத்துவது யார்?
ஆனால், கம்பீரின் அபராதத்தை செலுத்துவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அணியின் ஆலோசராக இருந்து வருகிறார். மேலும் கோலி அல்லது நவீன் போலல்லாமல், அவருக்கு ஏலம் அல்லது தக்கவைப்பு தொகை என எதுவும் இல்லை. அவர் அணியிடம் எவ்வளவு தொகையை சம்பளமாக பெறுகிறார் என்பது ரகசியமாக இருக்கும். சமூக ஊடகங்களில் பரவும் அனைத்துத் தொகைகளும் ஊகங்களே. அவரது அபராத தொகையை யார் செலுத்துவது? என்பதைப் பொறுத்த வரையில், அது ஆர்.சி.பி-யைப் போலவே, கம்பீர் மற்றும் நவீனின் அபராதத்தை லக்னோ அணி நிர்வாகம் தான் செலுத்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.