scorecardresearch

‘டின்னருக்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெண் யார்?’: கோலி சுவாரசிய பதில்

கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் இரவு உணவிற்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெண் குறித்து பேசியுள்ளார்.

Who’s the lady that Virat Kohli wants to take out for dinner, and where would he want to meet Mohammad Ali ?
Virat Kohli

Virat Kohli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி. 34 வயதான அவர் சமீபகாலமாக தரமான ஃபார்மில் உள்ளார். குறிப்பாக, சொந்த மண்ணில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்திய டி20 அணியில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவில்லை. இந்த தொடருக்கு அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் களமிறங்குவார்.

இந்நிலையில், விராட் கோலி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் இரவு உணவிற்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெண் மற்றும் தனித் தீவில் சிக்கித் தவிக்க விரும்பும் நபர் குறித்த கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை கொடுத்துள்ளார்.

நீங்கள் 16 வயது இளைஞனாக இருக்கும் போது உங்களுக்கு நீங்கள் கூறிக்கொள்ள விரும்பும் அறிவுரை என்ன?

உலகத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் உங்கள் மனதைத் திறந்து கொள்ளுங்கள். டெல்லியைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது.

உங்கள் மகிழ்ச்சியான இடம் எது அல்லது எங்கே?

மகிழ்ச்சியான இடம் வீடு.

நீங்கள் முயற்சித்த வித்தியாசமான உணவு முறை எது?

25…24 வயது வரை… இது எப்போதும் வித்தியாசமான உணவுமுறை. அதாவது உலகில் உள்ள அனைத்து ஜங்க் உணவுகளையும் நான் உண்மையில் சாப்பிட்டேன். அதனால் எனக்கு விசித்திரமாக இருந்தது, இது சாதாரணமானது.

உங்கள் பிளாங்கிங் (உடற்பகுதியை தரையில் இருந்து நேர்கோட்டில் வைத்திருப்பது) பதிவு என்ன?

எனக்கு தெரியாது. மூன்று, மூன்றரை நிமிடங்கள்? ஆம் நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

நீங்கள் இரவு உணவிற்கு அழைத்துச் செல்ல விரும்பும் வரலாற்றுப் பெண் யார்?

லதாஜியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. எனவே உரையாடல் மற்றும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் அவரது பயணத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது ஆச்சரியமாக இருந்திருக்கும்.

குடும்பத்தைத் தவிர ஒரு தீவில் யாருடன் சிக்கித் தவிக்க விரும்பும் நபர் யார்?

குடும்பம் தவிர… முகமது அலி.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Whos the lady that virat kohli wants to take out for dinner tamil news