Advertisment

நொறுக்கி அள்ளிய மேக்ஸ்வெல்: ஆப்கானின் தோல்வி ஏன் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி?

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட் மீது ஒரு கண் வைத்து பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்.

author-image
WebDesk
New Update
Why Afghanistan loss is good news for Pakistan Cricket World Cup 2023 Tamil News

நியூசிலாந்து இலங்கையிடம் தோற்றால் அல்லது பாகிஸ்தான் இங்கிலாந்திடம் தோற்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி ஆப்கானிஸ்தானை அரையிறுதிக்கு கொண்டு செல்லும்.

worldcup 2023 | New Zealand | Australia vs Afghanistan | new-zealand | pakistan | afghanistan: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

Advertisment

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் அடித்த இப்ராஹிம் சத்ரான் 129 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 292 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அப்போது, 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - கேப்டன் கம்மின்ஸ் இணை சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடி அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றனர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் இரட்டை சதம் விளாசி மிரட்டிய மேக்ஸ்வெல் 201 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் ஆனார். 

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 12 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் நிலையில், 2வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா 2வது அரையிறுதியில் எதிர்கொள்கிறது. மீதமுள்ள முதல் அரையிறுதிப் போட்டிக்கு ஏற்கனவே இந்தியா தகுதி பெற்று விட்டது. தற்போது இந்தியாவை எதிர்கொள்ளும் அணிக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. அவ்வகையில், உலகக் கோப்பையில் 4வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள அணிகளை இங்கு பார்க்கலாம். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket World Cup: Why Afghanistan’s loss is good news for Pakistan

ஆப்கானிஸ்தான்: 

8 புள்ளிகள் (-0.338 நெட் ரன்ரேட்) | மீதமுள்ள ஒரு போட்டி - தென் ஆப்பிரிக்கா 

நிறைய உதவி தேவைப்படும் ஆப்கானிஸ்தானுக்கு இது மிகவும் சவாலான கட்டமாக மாறியுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் அந்த அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால், அவர்கள் 10 புள்ளிகளுடன் முடிப்பார்கள். 

ஒருவேளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அவர்களும் 10 புள்ளிகளுடன் முடிப்பார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும். 

ஆப்கானிஸ்தானின் நெட் ரன்ரேட் இருப்பதால், அவர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக பெரிய வெற்றியை பெற வேண்டும். அத்துடன், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் மோசமான தோல்விகளை சந்திக்க வேண்டும் என்று நம்புவார்கள். 

நியூசிலாந்து இலங்கையிடம் தோற்றால் அல்லது பாகிஸ்தான் இங்கிலாந்திடம் தோற்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி ஆப்கானிஸ்தானை அரையிறுதிக்கு கொண்டு செல்லும். மூவரும் தோல்வியுற்றால், ஆப்கானிஸ்தானின் மைனஸில் (-0.338) இருப்பதால், அவர்கள் மற்ற 2 அணிகளை முந்திச் செல்ல சிரமப்படுவார்கள்.

நியூசிலாந்து: 

8 புள்ளிகள் (நெட் ரன்ரேட் +0.398) | மீதமுள்ள ஒரு போட்டி - இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான மழையால் குறைக்கப்பட்ட ஆட்டத்திற்குப் பிறகு, நியூசிலாந்து 401 ரன்களை குவித்து இருந்தபோதிலும் தோல்வியடைந்தனர். நாளை வியாழன் அன்று பெங்களுருவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்கள் இலங்கையை வீழ்த்த வேண்டும். நியூசிலாந்து இலங்கையிடம் தோற்றால், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் தோல்வி பெற வேண்டும். அப்போது நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும். 

மழை காரணமாக இலங்கைக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டால், நியூசிலாந்து அணியினர் ஒன்பது புள்ளிகளைப் பெறுவார்கள். மேலும் வருகிற வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், அவர்களால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். 

இந்த மூன்று அணிகளும் வெற்றி பெற்றால் அல்லது தோற்றால், நல்ல நெட் ரன்ரேட் (+0.398) இருப்பதால், நியூசிலாந்து முன்னேற நல்ல வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான்: 

8 புள்ளிகள் (நெட் ரன்ரேட் +0.036) | மீதமுள்ள ஒரு போட்டி - இங்கிலாந்து 

கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் நேரத்தில், பாகிஸ்தானுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். நியூசிலாந்து இரண்டு புள்ளிகளுடன் வெளியேறாமல் இருப்பதும், தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை வீழ்த்துவதும் அவர்களின் போட்டிக்கு முந்தைய நாளில் நடக்கும். 

அப்படியானால், நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்காது என்பதால், பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே தகுதி பெற முடியும் என்கிற சூழல் நிகழும். ஆனால் நியூசிலாந்து வெற்றி பெற்றாலோ மற்றும் ஆப்கானிஸ்தான் தோற்றாலோ, இந்த 3 அணிகளை விட நல்ல நெட் ரன்ரேட்டில்  நியூசிலாந்து கொண்டிருப்பதால், அதைச் செய்ய பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். 

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட் மீது ஒரு கண் வைத்து பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Pakistan Afghanistan New Zealand Australia vs Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment