Ipl-2024-auction | ricky-ponting: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நாளை செவ்வாய்க்கிழமை (டிச.19ம் தேதி) துபாயில் நடக்கிறது. ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் வருகை குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக சாடியுள்ளன.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு சேனல் 7-க்காக முதல் 3 நாட்களுக்கு மட்டும் தனது கருத்துக்களை ரிக்கி பாண்டிங் வழங்கி இருந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், அவர் கடைசி நாளில் வரவில்லை.
இதேபோல், பிக் பாஷ் லீக் (பி.பி.எல்) தொடருக்கான சிட்னி தண்டர் அணிக்கு பயிற்சியளிப்பதில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்ட பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் இருவரும் நாளை நடக்கும் ஐ.பி.எல் ஏலத்திற்காக துபாய் சென்றுள்ளனர். இதனை கடுமையாக சாடியுள்ள அனைத்தும் ஆஸ்திரேலிய ஊடகங்களும் அவர்களது இந்த நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல் ஏலத்திற்காக துபாய் செல்ல உள்ளார் என்று முதலில் செய்தி வெளியிட்ட கோட் ஸ்போர்ட்ஸ், "ரிக்கி பாண்டிங் டெஸ்டில் இருந்து சீக்கிரமாக வெளியேறியது மற்றும் சிட்னி தண்டரின் பயிற்சியாளர் போட்டியைத் தவிர்த்துவிட்டது அனைத்தும் ஐ.பி.எல் மேலாதிக்கம் தொடர்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது." என்று குறிப்பிட்டுள்ளது. இதேபோல், நியூஸ்.காம்.ஏ.யு (news.com.au) சமூக ஊடகங்களில் இருந்து ட்வீட்களைத் தொகுத்து'ஐபிஎல் மேலாதிக்கம் வெறித்தனமாகிவிட்டது' என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி டோட் கிரீன்பெர்க் SEN வானொலியில் பேசியது பின்வருமாறு:-
செப்டம்பரில் பி.சி.சி.ஐ-யின் இரண்டாவது ஐ.பி.எல் தொடர் பற்றிய ஊகங்கள் 'அழிவை உருவாக்கும்'. எனது முதல் அபிப்ராயம் இது நிச்சயமாக ஆச்சரியம் இல்லை. இருதரப்பு கிரிக்கெட் மற்றும் பிற கிரிக்கெட் சமூகத்தில் அழிவை உருவாக்கும் கூடுதல் தொடர் எப்போதும் இருக்கும். எனவே இது ஒரு உண்மையான சவால்.
மேலும் இது ஒரு குறுகிய கால பார்வையை நீங்கள் எடுக்கலாம் என்று நான் நினைக்கும் ஒன்றல்ல. அனைத்து சர்வதேச கிரிக்கெட்டுகளும் அர்த்தமுள்ள கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவதை உறுதி செய்வதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே நினைக்கிறேன். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பங்களித்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புடன் அந்த முன்னேற்றத்தை நாங்கள் கண்டோம். டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டில் நான் நினைக்கிறேன், தொலைவில் இருக்கும் வேறு சில நாடுகளுக்கு நாம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன்.
இது கடினமாக இருக்கும். இது மிகவும் உயர்மட்ட வீரர்களுக்கு வெளிப்படையாக லாபகரமானதாக இருக்கும், ஆனால் உலகெங்கிலும் உள்ள வாரியங்கள் மீதும், இருதரப்பு கிரிக்கெட் மீதும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.