Advertisment

குட்டி டிராவிட் யு-19 உலகக் கோப்பையில் ஆட முடியாதாம்... ஏன் தெரியுமா?

பி.சி.சி.ஐ-யின் ஜூனியர் தேர்வுக் குழு சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு தொடருக்கான இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்டைத் தேர்ந்தெடுத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Why canot Samit Dravid play for India at the Under 19 World Cup Tamil News

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கத் தகுதிபெறும் எந்த வீரரும் ஆகஸ்ட் 31, 2025 நிலவரப்படி 19 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

19 வயதுக்குட்பட்ட இந்தியா - ஆஸ்திரேலியா ஆடவர் அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  செப்டம்பர் 21 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் புதுச்சேரியிலும், 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் நடக்கிறது. 

Advertisment

இந்நிலையில், இந்த தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இந்திய ஆடவர் அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்:  Why can’t Samit Dravid play for India at the Under-19 World Cup?

இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் சமித் டிராவிட் விளையாடவில்லை. அவர் காயம் காரணமாக ஆடவில்லை. தற்போது அவர் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சரியான நேரத்தில் சமித் குணமடையவில்லை என்றால், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மற்றொரு வாய்ப்பைப் பெறுவது அவருக்கு கடினமாக இருக்கலாம்.

இது ஒருபுறமிக்க,  2026 இல் நடைபெறவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சமித் டிராவிட் இந்தியாவுக்காக விளையாட முடியாது என்பது தெரியவந்துள்ளது. ஐ.சி.சி-யின் வயது தகுதி அளவுகோல் காரணமாகவும், அவர் வயது வரம்பை மீறியிருப்பதாலும், இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட முடியாது.

“ஒரு வீரர், 19 வயதுக்குட்பட்டவராக இருந்தால், அதாவது 19 வயதுக்கு குறைவானவராக இருந்தால், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னதாக ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அல்லது 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பையில் தேசிய கிரிக்கெட் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதியுடையவர். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, இந்த போட்டிக்கு முந்தைய ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நள்ளிரவில் (பிறந்த நாளில்) வீரரின் வயதைக் குறிக்கிறது” என்று வயது அடிப்படையில் தகுதிக்கான ஐசிசி விதி கூறுகிறது. 

ஐ.சி.சி.யின் விதிமுறைகளின்படி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கத் தகுதிபெறும் எந்த வீரரும் ஆகஸ்ட் 31, 2025 நிலவரப்படி 19 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் சமித், அக்டோபர் 11-ஆம் தேதி 19 வயதை எட்டுகிறார். எனவே, அவரால் 2026 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ஆட முடியாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Rahul Dravid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment