ஹர்திக் பேட்டை சோதனை போட்ட நடுவர்கள்: காரணம் என்ன தெரியுமா?

வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம், நீளம், உள்ளிட்ட வடிவமைப்பு ஐ.பி.எல். விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சிறிய கையடக்க அளவுகோல் மூலம் சரிபார்த்தனர்.

வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம், நீளம், உள்ளிட்ட வடிவமைப்பு ஐ.பி.எல். விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சிறிய கையடக்க அளவுகோல் மூலம் சரிபார்த்தனர்.

author-image
WebDesk
New Update
Why did the umpire check Hardik Pandya bat during DC vs MI Tamil News

வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம், நீளம், உள்ளிட்ட வடிவமைப்பு ஐ.பி.எல். விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சிறிய கையடக்க அளவுகோல் மூலம் சரிபார்த்தனர்.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் இரவு மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதின. இதில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன. 

Advertisment

இந்நிலையில், இந்த ஆட்டங்களின்போது வழக்கத்திற்கு மாறாக நடுவர்கள் திடீரென வீரர்கள் பயன்படுத்திய பேட்டை சோதனை செய்தனர். இதற்கான காரணம்,  வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அகலம், நீளம், உள்ளிட்ட வடிவமைப்பு ஐ.பி.எல். விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை சிறிய கையடக்க அளவுகோல் மூலம் சரிபார்த்தனர். 

இந்த விதிப்படி வீரர்கள் பயன்படுத்தும் பேட்டின் அளவு அகலம்: 4.25 அங்குலம் நீளம்: 2.64 அங்குலம் மற்றும் விளிம்புகள்: 1.56 அங்குலம் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய போட்டிகளில் நடுவர்கள் சோதனை மேற்கொண்டனர். அதன் காரணமாக அதிரடி வீரர்களான ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மேயர், பெங்களூரு வீரர் பில் சால்ட், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டவர்களின் பேட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது

Hardik Pandya Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: