Nirmala Sitharaman | Praggnanandhaa: 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர் சர்வதேச செஸ் அரங்கில் இந்திய செஸ் வீரர்கள் செய்து வரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2023 இல் சாதனை படைத்த சென்னையைச் சேர்ந்த 18 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவை குறிப்பிட்டு பேசினார்.
“இளைஞர்கள் விளையாட்டில் புதிய உயரங்களை எட்டி வருவதில் நாடு பெருமிதம் கொள்கிறது. 2023ல் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக செஸ் ப்ராடிஜியும் நம்பர் 1 ரேங்க் வீரருமான ஆர்.பிரக்ஞானந்தா கடும் போராட்டத்தை நடத்தினார். 2010ல் 20க்கும் குறைவான செஸ் கிராண்ட்மாஸ்டர்களுடன் ஒப்பிடும்போது, இன்று இந்தியாவில் 80க்கும் மேற்பட்ட செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர்,” என்று நிர்மலா சீதாராமன் பேசியது போது, பிரதமர் நரேந்திர மோடி தனது மேசையைத் தட்டிப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
ஃபிடே (FIDE) உலகக் கோப்பையில், முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் சாம்பியன் பட்டத்துக்காக பிரக்ஞானந்தா போராடினார். இறுதியில் இந்திய வீரர் தோற்றாலும், அவர் கார்ல்சனுக்கு பெரும் தலைவலியை கொடுத்திருந்தார்.
பிரக்ஞானந்தா நாட்டின் முதல் தரவரிசை செஸ் வீரராக சில நாட்கள் இந்தியாவின் நம்பர் 1 ஆக இருந்தார். 2024 ஜனவரிக்கான ஃபிடே வெளியிட்ட தரவரிசையில் (ஒவ்வொரு முடிவிலும் புதுப்பிக்கப்படும்) இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 ஆக இருக்கிறார். தற்போதைய நேரடி மதிப்பீடுகளில் (நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்). 2747 என்ற நிலையான மதிப்பீட்டில், பிரக்ஞானந்தா தற்போது உலகின் முதல் தரவரிசை ஜூனியர் செஸ் வீரராக உள்ளார்.
1989 இல் விஸ்வநாதன் ஆனந்த் நாட்டின் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆனதிலிருந்து, இந்தியா செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 2010 ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவில் 23 கிராண்ட்மாஸ்டர்கள் இருந்தனர். சமீபத்தில் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பதக்கங்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டார். அந்த தொடரில் இந்தியா ஆசியாவின் வரலாற்றில் முதல்முறையாக மூன்று இலக்க பதக்கங்களை எட்டியது. 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களை இந்தியா வென்று அசத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Budget 2024: Why did Finance Minister Nirmala Sitharaman mention Magnus Carlsen and Praggnanandhaa in her speech?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“