Advertisment

அஸ்வின், ஜடேஜா அக்சர்... இவங்ககிட்ட மட்டும் பெரிய ரன் அடிக்க முடியாது; ஏன் தெரியுமா?

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் போன் சுழற்பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் ஏன் மிரட்டலாக உள்ளனர் என்பதற்கான விடை கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Why impossible to score big runs on turning tracks against R Ashwin Ravindra Jadeja and Axar Patel in tamil

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செய்வதை, எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களால் ஏன் பிரதிபலிக்க முடிவதில்லை?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India vs England: 2012ல் நடந்த இந்தியா - இங்கிலாந்து தொடரில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சார் மான்டி பனேசர் வீழ்த்தி இருந்தார். சச்சின் விக்கெட்டை அவர் கைப்பற்றி விதம் என்பது எந்தவொரு சுழற்பந்து வீச்சாளரின் கனவு விக்கெட்டாக பார்க்கப்படுகிறது. பந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி, ஆஃப்-ஸ்டம்பின் மேற்பகுதியை நோக்கி கூர்மையாக திரும்பியது. ஆனால், சச்சின் பந்தை லெக் சைடில் விரட்ட முயன்றார். அதனால், 95.4 கி.மீ வேகத்தில் பிட்ச் ஆகி வந்த பந்தை அவருக்கு சரிசெய்ய நேரமில்லாமல் போனது.  

Advertisment

"நீங்கள் விரைவாக பந்துவீசும்போதும், நல்ல பந்து வீச்சை வீசும்போதும், ​​பேட்டிங் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கிச் செல்லவோ கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று மான்டி பனேசர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இங்குதான் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் போன்றவர்கள் சொந்த மண்ணில் ஏன் மிரட்டலாக உள்ளனர் என்பதற்கான விடை கிடைக்கிறது. அவர்களுக்கு ஆடுகளங்களில் இருந்து உதவி கிடைத்தாலும், அவர்கள் மூவரும் பந்தை விரைவாக வீசி, பேட்டர்களுக்கு சரிசெய்ய போதுமான நேரம் கொடுக்கமால், பந்தை சரியான லையன் மற்றும் லெந்த்தில் அடித்து, தங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறடிக்க வைக்கிறார்கள். 

 "ஜடேஜா எப்பொழுதும் தனது ஸ்பெல்லின் ஆரம்பத்தில் விரைவாக பந்துவீசுவதை நீங்கள் பார்க்கலாம், அதன்பிறகு வேகத்தை மாற்றுகிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஏர் மூலம் வேகமாக பந்துவீசுவதற்கு கூடுதலாக ஸ்டம்பை தொடர்ந்து அடிப்பார்கள். அவர்கள் விக்கெட் டூ விக்கெட் வீசப் போகிறார்கள். 35-40 சதவீத பந்துகள் விக்கெட்டுகளைத் தான் தாக்கும் என்று நினைக்கிறேன்." என்கிறார் 44 வயதான மான்டி பனேசர். 

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செய்வதை, எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களால் ஏன் பிரதிபலிக்க முடிவதில்லை?

இந்தியாவில் இருக்கும் போது சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதற்கு திட்டமிடல் இருந்தாலும், அது வெகுவிரைவாக பந்துவீசுவது என்பது வெகுசிலமான வெகுமதிகளை மட்டுமே பெறுகிறது. "அவர்கள் வேகமாகப் பந்துவீசும்போது, ​​நீங்கள் பந்தின் வடிவத்தை இழக்கிறீர்கள். அதாவது, பேட்டரின் கண் பட்டைக்கு மேலே பந்து வீசும் திறன் மற்றும் அவர் முன்னோக்கி வர வேண்டுமா இல்லையா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. நீங்கள் வேகமாகப் பந்துவீச விரும்பினால், நீங்கள் இன்னும் அதன் வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும்." என்று மான்டி பனேசர் கூறுகிறார். 

விரைவாக பந்துவீசும்போது, ​​சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் துல்லியத்தை இழக்க நேரிடும். இதன் விளைவாக பவுண்டரிக்கு விரட்டப்படும் பந்துகளை அவர்கள் வீசுவார்கள். அதனால், இந்திய பேட்டர்கள் மீது அழுத்தம் குவியாமல் போகலாம். எனவே ஸ்லோயர் பந்துகளை வீசுவது பல சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விரும்பத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இது அதிக கட்டுப்பாட்டைக் கொடுக்கும். "நீங்கள் சற்று மெதுவாக பந்துவீசினால், நீங்கள் பந்தில் நல்ல வடிவத்தைப் பெறலாம்." இருப்பினும், பந்து மெதுவாக வரும்போது, ​​பந்து வீச்சைத் தவறாக கணித்தாலும், பேட்டருக்கு அதைச் சரிசெய்ய கூடுதல் நேரம் கிடைக்கும் என்பதுதான் அது கொண்டு வரும் பிரச்சனை என்று மான்டி பனேசர் கருதுகிறார்.

"இந்திய ஆடுகளங்களில் விக்கெட்டுகளின் வேகம் அதிகம் இல்லாததால் நீங்கள் அவர்களை காற்றில் அடித்தாலும் சரி, அது சுழன்றாலும் சரி அதனைச் செய்ய முடியும்" என்று அவர் கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் 91 ரன்கள் சேர்த்தது, தோல்வி காரணமாக இந்திய பேட்டர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எடுக்கும் அணுகுமுறையை வகைப்படுத்தியது. இடது கை ஆட்டக்காரரான அவரின் ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே கரடுமுரடான நிலையில், ஒவ்வொரு முறையும் ஜாக் லீச் பந்தை அந்த இடத்தில் தரையிறக்க முயலும் போது, ​​பண்ட் இறங்கி வந்து ஆடினார். மேலும் அவரை அதிகபட்சமாக ஸ்பின்னர்கள் கட்டுப்படுத்த விடாமல் விளையாடினார். அப்போது வேடிக்கையாக பேசிய லீச் "ஐ.பி.எல்-லில் விளையாடுகிறேன் என்று நினைத்தேன்!" என்றார். மேலும் அவர் "ஒரு சுழற்பந்து வீச்சாளராக, நீங்கள் சில நேரங்களில் அதை எதிர்பார்க்க வேண்டும். ஆனால் நான் 8 ஓவர்களுக்கு 80 ரன்களை விட்டுக்கொடுத்தது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை.”என்றும் கூறினார்.

இந்திய பேட்டர்கள் காட்டும் ஆக்ரோஷம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று மான்டி பனேசர் நம்புகிறார். “சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு நல்ல வடிவம், நல்ல டிப், நல்ல டிராப் ஆகியவற்றுடன் பந்து வீசுவதை அவர்கள் விரும்பவில்லை. இது இந்திய வீரர்களுக்கு ஆபத்தான பந்து. எனவே அவர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள், அதனால் நீங்கள் அதை விரட்டலாம், ஆடுகளத்தில் பந்து வீசுங்கள், அந்த வடிவத்தை அதில் வைக்க வேண்டாம். மேலும் லென்ந்த்தை எடுப்பது எளிதாக இருக்கும், பிறகு அவர்கள் நாள் முழுவதும் உங்களுக்கு குடைச்சல் கொடுப்பார்கள்." என்று அவர் கூறுகிறார். 

கிரியேட்டிவ் ஃபீல்டிங் செட்அப் 

மும்பையில் கெவின் பீட்டர்சன் 186 ரன்கள் எடுத்தது, இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்ய வந்த அணியின் பேட்டர் விளையாடிய சிறந்த எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். அப்போது அவர் 48.29 சராசரியில் 338 ரன்கள் எடுத்தார். அவர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது, ​​அஸ்வின் அனுபவமின்மை மற்றும் ஹர்பஜன் சிங் மற்றும் பிரக்யான் ஓஜாவின் சோர்வுற்ற கால்கள் தொடர் முழுவதும் தாக்குதலுக்கு பதில் கொடுக்கவில்லை. 

10 வருடங்களுக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜோ ரூட் தொழில்நுட்ப ரீதியாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடும் வீரர்களில் ஒருவர். அவர் விருப்பப்படி ஸ்டிரைக்கை சுழற்ற முடியும் மற்றும் ஸ்வீப் ஷாட்டை வெளியே கொண்டு வர முடியும். பந்து வீச்சாளர்களை தங்கள் உத்தியை மறுபரிசீலனை செய்ய முடியும் மற்றும் பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த விடக்கூடாது. அவர் சென்னையில் பிரமாண்டமான இரட்டை சதம் விளாசிய போது, ​​சுழற்பந்து வீச்சுக்கு எதிரான அவரது பாணி நன்கு எண்ணெய் தடவிய இயந்திரம் போல் வேலை செய்தது. “ஸ்பின்னர் சற்று மெதுவாக பந்து வீசும்போது ஸ்வீப் ஷாட் மிகவும் எளிதாக இருக்கும். ஏனெனில் நீங்கள் மெதுவாக பந்துவீசும்போது நீங்கள் பந்தை அடையலாம்,” என்று மான்டி பனேசர் கருதுகிறார். 

“அவர்களும் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா எப்போதும் களங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் வித்தியாசமான தந்திரோபாயங்கள் மற்றும் வெவ்வேறு விளையாட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளனர். இதனால் பேட்டர்களால் எளிதில் செட்டில் ஆக முடிவதில்லை. ”என்று முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்:  India vs England: Why is it nearly impossible to score big runs against R Ashwin, Ravindra Jadeja and Axar Patel on turning tracks

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment