பியூஷ் சேக்சரியா, எழுத்தாளர்
மேற்கு ஆபிரிக்காவில், நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட நாடு மாலி. இந்த நாட்டின் பரப்பளவு இந்தியாவில் ஏழில் ஒரு பங்கு அளவுதான் உள்ளது. இதில் பெரும் பகுதி உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தால் ஆனது. நைஜர் என்ற ஆறு சஹாராவின் மையப்பகுதிக்கு செல்ல துறைமுக நகரமான மோப்டியைக் கடந்து, நாடு முழுவதும் செல்கிறது. மோப்டிக்கு தென்கிழக்கே, ஆற்றின் வெள்ளப் பகுதிகள் மெதுவாக உயர்ந்து ஒரு பெரிய பீடபூமியில் வியத்தகு முறையில் பாண்டியாகரா பாறைகளில் முடிகிறது.
இந்த பாறைகளின் விளிம்பிலும் அடிவாரத்திலும், டோகன் என்று அழைக்கப்படும் பழங்கால மக்கள் வசிக்கின்றனர். 2001 ஆம் ஆண்டில், நான் பெக்னெமாடோவின் டோகன் கிராமத்தில் ஒரு பள்ளியைக் கட்டும் வேலையில் இருந்தபோது, நான் பிரான்சில் கட்டிடக்கலையில் முதுகலை படிப்பைத் தொடங்கினேன். டோகன் மக்கள் சிறந்த கதைசொல்லிகள், அவர்கள் மிகுந்த வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் வாழ்ந்தனர். அங்கே அரிதாக பயணம் செய்தவர்கள்கூட, கடந்த கால பாலிவுட் படங்களின் ஹீரோக்களான விஜய் மற்றும் ஜிம்மி ஆகியோர் வாழும் இந்தியா திரைப்படங்களின் பூமியாக கருதினர். அவர்கள் இவர்களின் பாடல் மற்றும் நடனங்களை விரும்பினர். இந்திய திரைப்பட கதாநாயகிகளை உலகின் மிக அழகானவர்களாகப் பார்த்தார்கள். அவர்கள் இந்தியாவின் பரப்பளவால் ஈர்க்கப்பட்டனர். இந்தியா பயணம் செய்த சிலர், கணினித் துறையில் அதன் முன்னேற்றத்தைக் கண்டு வியந்தனர். ஆனால், அனைவரும், வயது, கல்வி அல்லது பயண வெளிப்பாடு ஆகிய வித்டியாசம் இல்லாமல், அவர்கள் கூறிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா ஒரு மந்திரவாதிகளின் பூமி. எல்லா இந்தியனும் ஒரு மந்திரக்காரர்கள். டோகன், அவர்களின் மாயாஜால சக்திகள், முகமூடி அணிந்த நடனக் கலைஞர்கள் மற்றும் சிக்கலான அண்டவியல் ஆகியவற்றிற்கு பிரபலமானவர்கள். இருப்பினும், பிரமிப்பு மற்றும் ஏமாற்றத்துடன், அவர்கள் என்னிடம் சொன்னார்கள், “நாங்கள் டோகன் சக்திவாய்ந்த மந்திரவாதிகள். ஆனால், இந்தியர்களாகிய நீங்கள் அதைவிட சக்திவாய்ந்தவர்கள். நாங்கள் டோகன் செய்வது சிவப்பு மந்திரம். நீங்கள் இந்தியர்கள் செய்வது சூனியம்! சிவப்பு சக்தி வாய்ந்தது. ஆனால், சூனியம் மிகவும் சக்தி வாய்ந்தது.” என்று கூறினார். நான் அதை என் வாழ்க்கையில் பார்க்கவே இல்லை என்று விளக்குவதற்கு சற்று முன்பு, அவர்கள் சிரித்துக்கொண்டே மழுப்பலாக, “ஏ, என் நண்பரே, நீங்கள் எனக்கு அதை கற்றுக்கொடுப்பீர்களா? மாட்டீர்களா? நீங்கள் செல்வதற்கு முன்… ஏதாவது மந்திரம் சூனியம் செய்யலாமா?” என இந்த உரையாடல் சிரிப்பில் முடிந்தது. ஆனால், சில நேரங்களில், அவர்கள் இந்த சூனிய வியாபாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதாக நான் உணர்ந்தேன்.
சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் பயணம் செய்வது செய்வது பிரபலமாக இருந்தது. பல இளம் டோகன் ஆண்கள் வழிகாட்டிகளாக பணியாற்றினர். அவர்களுக்கு ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி கிடைப்பது ஒரு லாட்டரி மாதிரி. நீங்கள் அவர்களிடம் எந்தத் தொகையையும் கேட்கலாம். அவர்கள் கொடுக்க ஒப்புக்கொள்வார்கள், பேரம் பேச மாட்டார்கள். தவறு நடந்தால் கண்ணியமாக இருப்பார்கள். ஒரு வழிகாட்டி என்னை நோக்கி வந்தார். அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம், என் கையைப் பிடித்து அவரது தலையில் வைத்து, “நீங்கள் என் மந்திரவாதி. என்னை ஆசிர்வதியுங்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறும்போது, எனக்கு ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி கிடைப்பார்.” என்று கூறினார். ஏனென்றால், அவர் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை தொடர்ச்சியாக மூன்று முறை பெற்றார். அது என்னைக் கொஞ்சம் பயமுறுத்தியது. அதனால், வழிகாட்டிகள் தங்கும் உணவகத்திற்குச் செல்வதை நிறுத்தினேன்.
மாலி குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டான கால்பந்து விளையாட்டை சித்தரிக்கும் படம்
இதற்கிடையில், இப்பகுதியில் கால்பந்து ஒரு பிரபலமான விளையாட்டாக இருந்தது. மாலி தேசிய கால்பந்து அணி தி ஈகிள்ஸ் என்று அழைக்கப்பட்டது. அவர்களின் பரம எதிரி அணி என்றால் அது அண்டை நாடான ஐவரி கோஸ்ட் அணிதான். ஒரு நாள் மாலை, பெக்னெமாடோ கிராமத்தில், “இந்தியா ஒரு பெரிய நாடு, கணினியில் இவ்வளவு முன்னேறியிருக்கிறது, கால்பந்து உலகக் கோப்பையில் இந்தியா விளையாடாமல் இருப்பது எப்படி?” என்று என்னிடம் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் என்னைப் பார்த்தார்கள், ஏதோ ஒரு பெரிய பதிலுக்காகக் காத்திருப்பது போல பார்த்தார்கள். நான் திரும்ப பதில் சொல்ல கேட்கப்பட்டேன். ஆனால், நான் பதிலளிக்க முயற்சி செய்தேன். “இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரம் இல்லை. நாங்கள் விளையாட்டை மதிப்பதில்லை. அங்கே ஒரே ஒரு விளையாட்டுதான் அது கிரிக்கெட்.” என்று கூறினேன். என் பதில் அவர்களிடையே மௌனத்தை சந்தித்தது; என்னுடைய பதிலால் அவர்கள் ஈர்க்கப்படவில்லை.
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, அவர்களில் ஒருவர், “இருங்க, இது காரணமில்லை, ஏன் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்!” ஒரு கதை உருவாகிக்கொண்டிருந்தது. “ஒரு காலத்தில், இந்தியா ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்தது. அவர்கள் தோற்றால், அவர்கள் அகற்றப்படுவார்கள். இந்திய தற்காப்பு தோல்வியடைந்தது, முன்கள வீரர்கள் குழப்பமடைந்தனர், மிட்ஃபீல்டர்கள் தோற்றனர், எதிரணியினர் விருப்பப்படி கோல் அடித்தனர். இதையெல்லாம் இந்திய கோல்கீப்பர் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். நம்முடைய கதைசொல்லி இடையில் நிறுத்தி கதையில் திருப்பத்தை உருவாக்கினார். “ஆனால் இந்தியர்களை நீங்கள் அறிவீர்கள், இந்திய கோல்கீப்பர் ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி. வியத்தகு முறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. தனது சூனியத்தால் கால்பந்தை பாம்பாக மாற்றினார். இதைப் பார்த்த இந்திய வீரர்கள். பந்தை மரியாதையுடன் நடத்தி, இடைவெளியைக் கடைபிடித்தனர். ஆனால், எதிர் அணிக்கு அது வெறும் பந்துதான். விரைவிலேயே, ஒருவர் பின் ஒருவராக எதிரணி வீரர்கள் வலியால் துடித்தபடி தரையில் உருண்டனர். எதிரணி அணி மற்றும் போட்டி நடுவர்களால் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் பீதியடைந்தனர், போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்தியா இந்த தொடரில் வெளியேறுவதில் இருந்து காப்பாற்றப்பட்டது! இருப்பினும், பார்வையாளர்களில் சிலருக்கு சூனியம் தெரிந்தது. என்ன நடக்கிறது என்பதை அவரால் சொல்ல முடியும். அவர் அந்த ரகசியத்தை ஃபிஃபாவுக்கு கூறினார். அது இந்தியாவை வாழ்நாள் தடை செய்தது.” என்று கூறிய எனது டோகன் நண்பர் மூச்சுவிடாமல் தொடர்ந்தார். “அப்படியானால், இந்தியா ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடாததற்கு சூனியம் தான் காரணம்.” வெற்றிகரமாக இடையில் நிறுத்தினார். நாங்கள் அனைவரும் குபீர் எனச் சிரித்தோம். இருப்பினும், இன்றுவரை, அவர்களில் பெரும்பாலோர் இந்த கதையை நம்புகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
இந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பியூஷ் சேக்சரியா, ஒரு இளம் இயற்கை ஆர்வலர், கட்டிடக் கலைஞர், புவியியலாளர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”