India-vs-australia | ravichandran-ashwin | rohit-sharma | bcci: சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு முன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. வருகிற 22ம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஆல்ரவுண்டர் வீரரும், ஆஃப் ஸ்பின்னருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.
இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய ஆல்ரவுண்டரான அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை. அதனால், அவரது இடத்தை நிரப்ப அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்பின்-பவுலிங் ஆல்-ரவுண்டர் விருப்பம் அணிக்கு தேவை என்றாலும், அஸ்வினின் ஃபார்ம் மற்றும் ஒரு வருடத்திற்கு மேலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளாதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. கடைசியாக அவர் 2022 ஜனவரியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் பங்கேற்று விளையாடி இருந்தார்.
அந்தத் தொடரில் அவர் பார்லில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். மேலும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இருப்பதை அது சுட்டிக்காட்டினாலும். அவர் மீண்டும் அழைக்கப்படவில்லை. உண்மையில், 2017ல் வெஸ்ட் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திலிருந்து அவர் அந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/dd8d1cfb-215.jpg)
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை முன்னதாக, இந்தியாவின் ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, அஸ்வினுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித், 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 115 ஒருநாள் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளர் தொடர்ந்து விளையாட வேண்டிய அவசியமில்லை என்று விளக்கினார். ஆட்ட நேரமின்மையால் குழப்பமடையாத ரோகித், அஸ்வினின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் உலகக் கோப்பைக்கு அக்சர் கிடைக்காத பட்சத்தில் இந்தியாவின் விருப்பங்களைப் பற்றி அறிய ஆஸ்திரேலிய தொடரில் அவரை முயற்சிக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
"அஸ்வினுக்கு இருக்கும் அனுபவத்துடன், 100 டெஸ்ட், 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆம் இது எல்லாம் கடந்த காலங்களில் தான் ஆனால் அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அஸ்வின் போன்ற வீரர்களுக்கு, மைதானத்தில் விளையாடும் நேரம் மற்றும் போட்டிகள் பற்றி அவ்வளவு கவலை இல்லை. அதனால்தான் அவர் நமக்கு விருப்பமானவராக இருந்தால், அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம். அவருக்கு இருக்கும் அனுபவத்தால், இவரைப் போன்றவர்களுக்கு, உடம்பை விட தலையில் தான் அதிகம் திறமை இருக்கும். அவரை அணிக்கு உள்ளே அழைத்துச் செல்வது, அவர் எங்கிருக்கிறார், அவரது உடல் எப்படி இருக்கிறது மற்றும் அது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று நினைத்தேன்." என்று கேப்டன் ரோகித் கூறினார்.
ஆசியக் கோப்பை ஆட்டத்தில் அக்சர் காயமடைந்தபோது, அவரது இடத்தை நிரப்ப ஆல்ரவுண்டர் வீரரும், ஆஃப் ஸ்பின்னருமான வாஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டார். அவர் ஆடும் லெவன் அணியில் இருந்தபோதிலும் இறுதிப் போட்டியில் பந்துவீசவில்லை அல்லது பேட்டிங் செய்யவில்லை, ஆனால் இந்தியா அவரை ஆஸ்திரேலியா தொடருக்கு தக்க வைத்துக் கொண்டது.
பி.சி.சி.ஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், அக்சரின் காயம் குறித்த கேள்விக்கு பதிலளித்து, மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன் அவர் குணமடைவார் என்று நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது என்றார். இருப்பினும், அவரது தேர்வு உடற்தகுதிக்கு உட்பட்டது, அவருக்கு பதில் சுந்தர் மற்றும் அஷ்வின் விருப்பங்கள் இருக்கும் என்றும் விளக்கினார்.
"அக்சரின் காயம் பற்றி எங்களுக்கு கூறப்பட்டது என்னவென்றால், அவர் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அது எங்களுக்கு இப்போது இரண்டு வழிகளை விட்டுச்செல்கிறது. இவர்களுக்கு இப்போது ஓரிரு ஆட்டங்கள் கிடைத்தால், அவர்கள் அந்த வழியில் செல்ல வேண்டிய அணி நிர்வாக விருப்பங்களை அது வழங்குகிறது. அக்சர் ஃபிட்டாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். வாஷி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார். அஷ்வின் அனுபவத்தைத் தருகிறார், எனவே சில கட்டத்தில் அந்த நபர்களைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது எங்களுக்கு விருப்பங்களைத் தருகிறது," என்று அவர் கூறினார். .
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 22, செப்டம்பர் 24 மற்றும் 27 க்கு இடையில் முறையே மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“