2024 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடருக்கான இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
இந்நிலையில், இந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியின் ஒத்துழையாமை மனப்பான்மைக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. ஷஹீன் ஷா அப்ரிடி அணியின் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும், பயிற்சியாளர் முகமது யூசுப்புடன் கடுமையான வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Explained: Why Shaheen Shah Afridi might face disciplinary action by PCB
அதிக நோ-பால்களை வீசியதை யூசப் சுட்டிக்காட்டியதால் இருவருக்கும் இடையே பரபரப்பான விவாதம் ஏற்பட்டது என்றும், ‘ஷாஹீன் முகமது யூசுப்பிடம் தான் செய்து கொண்டிருந்ததைச் செய்ய அனுமதிக்குமாறு கூறினார். மேலும் யூசுப்பை அவரது வேலை மட்டும் பார்த்தால் போதுமானது' என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (பி.சி.பி) தெரிவிக்கப்படவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, "இது ஒரு வழக்கமான நிகழ்வே தவிர வேறொன்றுமில்லை, எனவே, அந்த சம்பவம் அங்கேயே மூடப்பட்டது" என்று பதிலளித்தார்.
ஆனால் ஷாஹீன் மன்னிப்பு கேட்ட போதிலும், குழு அதிகாரிகள் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. “உலகக் கோப்பை தொடரின் போது நடந்த அனைத்தையும் நாம் குறிப்பிட வேண்டும். இந்த விவகாரத்தில் பி.சி.பி தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, வங்கதேசத்திற்கு எதிரான பாகிஸ்தானின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஷஹீன் இழக்க நேரிடும். இருப்பினும், அதிகாரிகளில் ஒருவர் வீரரை கைவிடுவதற்கு ஆதரவாக இல்லை. ஆனால் எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கையை பரிந்துரைத்துள்ளார்கள்.
"வெளிநாட்டு லீக்குகளுக்கான ஷாஹீனின் என்ஓசியை ரத்து செய்ய நான் பரிந்துரைக்கிறேன். ஏ பிரிவு ஒப்பந்தத்தில் இருந்து அவர் பதவி நீக்கம் செய்வதும் பி.சி.பி-க்கு கிடைக்கக்கூடிய ஒரு விருப்பமாகும். எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தலைவருக்கு இறுதி அதிகாரம் உள்ளது. வேகப்பந்து வீச்சாளரைக் கூட மன்னிக்க அவருக்கு அதிகாரம் உள்ளது,” என்றார்.
வங்கதேச அணிக்கு எதிரான தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் ஆகஸ்ட் 30-ம் தேதியும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.