FIFA World Cup: கத்தாரில் ஏன் செயின்ட் ஜார்ஜ் உடைகளுக்கு அனுமதி இல்லை?

இங்கிலாந்து ரசிகர்கள் மைதானங்களில் சிலுவைப்போர் உடைகளை அணிவதற்கு கத்தார் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Why St George attires are not welcome at Qatar stadiums Tamil News
A football anti-racism group called Kick It Out has asked English fans from refraining to dress up as crusaders for the remaining matches. (Twitter/Robert Carter)

FIFA World Cup –  Qatar stadiums  – St George attires  Tamil News: பொதுவாக இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் செயின்கள், ஹெல்மெட் மற்றும் கவசங்களை அணிந்த சிப்பாயாக சித்தரிக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் ‘இராணுவ துறவி’ போல் அணிந்துகொண்டு கால்பந்து மைதானங்களுக்கு செல்வது வழக்கம். அதையே, ஈரானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தின் போது சில இங்கிலாந்து ரசிகர்கள் சிலுவைப்போர் மோடில் செயின்ட் ஜார்ஜ் உடையணிந்து மைதானத்திற்கு நுழைய முற்பட்டுள்ளனர்.

ஆனால், மைதானத்திற்கு வெளியே இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அது உள்ளூர் மக்களின் உணர்வைப் புண்படுத்தும் என்பதால், கவசம் அணிந்து செயின்ட் ஜார்ஜ் உடையில் வந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ராபர்ட் கார்ட்டர் வீடியோ வெளியிட்டார்.

அவரது வீடியோவில், சிலுவைப்போர் உடையணிந்த இங்கிலாந்து ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுக்கிறார்கள். மேலும், அவர்களை வேறு உடையை அணி வரக்கோரி திருப்பி விடுகின்றனர்.

சிலுவைப்போர் உடைக்கு மறுப்பு: காரணம் என்ன?

சிலுவைப் போர்கள் இடைக்காலத்தில் லத்தீன் திருச்சபையால் தொடங்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட மற்றும் சில சமயங்களில் இயக்கப்பட்ட மதப் போர் ஆகும். 1095 மற்றும் 1291-க்கு இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்தவப் படைகள் இஸ்லாமிய ஆட்சியிலிருந்து ஜெருசலேமையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கடுமையாக போரிட்டன. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு சூறையாடப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதன் காரணமாக இங்கிலாந்து ரசிகர்கள் மைதானங்களில் சிலுவைப்போர் உடைகளை அணிவதற்கு கத்தார் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதனிடையே, ‘கிக் இட் அவுட்’ என்ற இனவெறிக்கு எதிரான கால்பந்து குழு, மீதமுள்ள போட்டிகளுக்கு சிலுவைப்போர் உடை அணிவதைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

“FIFA உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு, மாவீரர்கள் (நைட்ஸ்) அல்லது சிலுவைப்போர் வீரர்களைக் குறிக்கும் ஆடம்பரமான ஆடைகள் போன்ற சில உடைகள் கத்தார் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் வரவேற்கப்படக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Why st george attires are not welcome at qatar stadiums tamil news

Exit mobile version