scorecardresearch

மழையால் தலா ஒரு புள்ளி: பிளே ஆஃப் சுற்றுக்கு சி.எஸ்.கே நுழைவதில் நெருக்கடி? 

மழையால் சி.எஸ்.கே அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைதுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் 18 புள்ளிகள் தேவைப்படும் என்பதால், சி.எஸ்.கே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது சாத்தியமா ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சி.எஸ்.கே
சி.எஸ்.கே

சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் 18 புள்ளிகள் தேவைப்படும் என்பதால், சி.எஸ்.கே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது சாத்தியமா ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சி.எஸ்.கே, லக்னோ அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 125 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் போட்டி தொடர்ந்து நடந்திருந்தால், 2 புள்ளிகளை சி.எஸ்.கே எடுத்திருக்கும். ஆனால் மழையால் சி.எஸ்.கே அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் சி.எஸ்.கே 10 போட்டிகளில் விளையாடி, 11 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல 16 முதல் 18 புள்ளிகள் தேவை.

சென்னையில், சி.எஸ்.கே அணி டெல்லி மற்றும் கொல்கத்தாவை எதிர்கொள்ள உள்ளது. இதுபோல கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு சென்று டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் சி.எஸ். கே இனி நடக்க இருக்கும் 3 போட்டிகளில் வென்றாலும் கூட 17 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதுவே 2 போட்டிகளில் மட்டுமே வென்றால் இன்னும் குறைவாக 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். புள்ளிகள் பட்டியலில் சி.எஸ்.கேவிற்கு கிழே உள்ள அணிகள் தோல்வியை தழுவினால் மட்டுமே சி.எஸ்.கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் சி.எஸ்.கே அணி 4 போட்களிலும் வென்றாக வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Will csk enter play off ipl 2023

Best of Express