கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் புகழ்மிக்க விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) தொடங்கியது. வருகிற 16ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமாடி வருகின்றனர். இந்நிலையில், டென்னிஸ் போட்டியைக் காண வரும் ரசிகர்கள், அங்கிருக்கும் தியான அறையை உடலுறவுக்கு பயன்படுத்துக்கூடாது என்று விம்பிள்டன் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் பல மைதானங்களில் (கோர்ட் என அழைக்கப்படும்) நடைபெறும். கோர்ட் அருகே ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய அறைகள் உள்ளன. இந்த அறையில், இறை வணக்கம், தியானம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ரசிகர்கள் தங்கி கொள்ளலாம். சார்ஜிங் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண வந்த ஜோடி ஒன்று 12-வது கோர்ட் அருகே உள்ள தியான அறைக்கு சென்று உடலுறவு கொண்டதாகவும், இது ரசிகர்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி சாட்சியம் கூறிய நபர் ஒருவர், ஆண் மற்றும் பெண் என இரண்டு பேர், முகத்தில் பெரிய புன்னகையுடன் அறையில் இருந்து வெளியே வந்தனர். அந்த பெண் கோடை காலத்தில் அணிய கூடிய நீண்ட கவுனை அணிந்து காணப்பட்டார். அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? என்பதில் சந்தேகமே இல்லை என கூறியுள்ளார்.
இதேபோல், மற்றொரு ரசிகர் கூறும்போது, கதவுக்கு அருகே இருந்து காதல் நெருக்கத்துடன் இருந்ததற்கான முனகல் சத்தங்கள் கேட்டன என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இதுபோன்று எதுவும் நடந்து விட கூடாது என்பதற்காக விம்பிள்டன் போட்டி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அனைத்து இங்கிலாந்து புல்வெளி டென்னிஸ் கிளப்பின் தலைமை செயல் அதிகாரி சல்லி போல்டன் பேசுகையில், அறையை மக்கள் சரியான வழியில் பயன்படுத்துகின்றனர் என உறுதி செய்யப்படும். அமைதி அறை என்றால் அதில் பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். ஜோடிகள் நெருக்கத்துடன் இருக்க பயன்படுத்த கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.