Advertisment

சாம்பியன் வீரர் இருந்தும் அவங்க ஜெயிக்கல… பவன் ஷெராவத் இல்லாமலே இவங்க அடிச்சாச்சு..! மறக்க முடியாத தமிழ் தலைவாஸ் வெற்றி

பவன் ஷெராவத்தின் காயம் காரணமாக விலகல் மற்றும் பயிற்சியாளர் உதயகுமாரின் திடீர் விலகல் என அணியில் அடுத்தடுத்த விலகல்கள் தமிழ் தலைவாசுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.

author-image
Martin Jeyaraj
New Update
Without any champion players Tamil Thalaivas enter into semi final PKL 9 TAMIL NEWS

Pro Kabaddi 2022 playoffs: UP Yoddhas with Pardeep Narwal, Tamil Thalaivas without pawan sehrawat enter into semi final TAMIL NEWS

UP Yoddhas vs Tamil Thalaivas, Eliminator 2, Pro Kabaddi League 9 Tamil News: புரோ கபடி தொடரின் நடப்பு சீசனில் பவன் ஷெராவத் எனும் மாபெரும் நட்சத்திர வீரர் மேல் கொண்ட நம்பிக்கையில் களமாடியது தமிழ் தலைவாஸ். ஆனால், அந்த நம்பிக்கையோ தொடக்க ஆட்டத்தில் சிதைந்துபோனது. குஜராத்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் பவனின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு வெளியேறினார். இது அணிக்கு பெரும் பின்னவடைவை ஏற்படுத்தியது. அடுத்து நடந்த 6 ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்று தோல்விகளால் துவண்டு போய் இருந்தது.

Advertisment

பவன் ஷெராவத்தின் காயம் காரணமாக விலகல் மற்றும் பயிற்சியாளர் உதயகுமாரின் திடீர் விலகல் என அணியில் அடுத்தடுத்த விலகல்கள் தமிழ் தலைவாசுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது. ஆனாலும், இந்த தடைகளை உடைத்தெறியவும், சமாளிக்கவும் முடியும், 'வாருங்கள் நமக்கும் எதிராக களமாடும் அணிகளுக்கு நாம் யார்?, நம்முடைய திறன் என்ன?, நம்மிடம் புதைந்து கிடக்கும் பலமும், சூத்திரமும் என்ன? என்பதை இந்த கபடி உலகிற்கு காட்டுவோம்' என்பதை போல், அணியின் வீரர்களை பட்டை தீட்டி களமிறங்கினார் புதிய பயிற்சியாளர் அஷன் குமார்.

publive-image

முன்னாள் இந்திய பயிற்சியாளரான அவரது ஊக்கமும், அவர் வகுத்த திட்டமும் மெல்ல மெல்ல பளித்தன. அதன்படி, லீக் சுற்றில் 8 தோல்வி, 10 வெற்றியுடன் என புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தைப்பிடித்து பிளே-ஆப்க்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ். இதன் மூலம் புதிய வரலாறையும் படைத்து இருந்தது. அப்படி என்ன வரலாறு என்றால்?, 2017 ஆம் ஆண்டில் அந்த அணி அறிமுகமானது முதல் கடந்த சீசன் வரை பட்டியலில் 11 மற்றும் 12 வது இடத்தோடு தான் தொடரை நிறைவு செய்தது. ஆனால் இந்த சீசனில் தான் முதல் முறையாக பிளே-ஆப் எனும் கனவுச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: கடைசி கட்டத்தில் நிகழ்ந்த ஆல் அவுட்… போராடி வெளியேறிய தமிழ் தலைவாஸ்!

இந்த சுற்றின் நேற்றை ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ், வழக்கம் போல் டிஃபென்ஸில் கலக்கியது. தொடக்க முதலே தீவிரமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது. அதேவேளையில் உ.பி. யோத்தாசும் சண்டையிட்டு ஆடினார்கள். போட்ட போட்டி போட்டார்கள். போட்டியின் தொடக்கத்தில் விறுவிறுவென புள்ளிகளை குவித்த பர்தீப் நர்வால் எனும் உ.பி. யோத்தாசின் சாம்பியன் வீரரை மடக்கி மடக்கி பிடித்தனர். அவர் ரெயிடு வந்தபோதெல்லாம் கால் பூட்டு தான். ஆனால், மற்றொரு சாம்பியன் வீரரான சுரேந்தர் கில் யார் கையிலும் சிக்காமல் ஆட்டம் காட்டி வந்தார்.

அவர் கபடி பாடி வந்தாதாலே போனஸ் பாயிண்ட் வந்துவிடும். மறுபுறம், ரெயிடில் அடி வாங்கிய பர்தீப் நர்வால் இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாசின் உத்தியை யூகித்துக்கொண்டார். மேலும், அவர் அதிரடியாக விளையாடி முக்கிய 3 புள்ளிகளை எடுத்து தங்கள் அணியை வெற்றி நோக்கி அழைத்துச்சென்றார். ஆனால், மீண்டும் ஒருமுறை தங்களின் வலுவான டிஃபென்சை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ், அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து ஆட்டத்தை 36 - 36 என்ற கணக்கில் சமன் செய்தனர்.

இதனால், போட்டியில் டை பிரேக்கர் கொண்டுவரப்பட்டது. அதிலும் தனது சூத்திரம் இதுதான் என்று கூறி, அணியை மீண்டும் ஒரு முத்திரையைப் பதிக்க வைத்தார் பயிற்சியாளர் அஷன் குமார். அவரின் பாணியை கற்பூரம் போல் பற்றிக்கொண்ட வீரர்கள் வழக்கம் போல், பற்றி எறிந்தனர். போட்டியையும் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி உ.பி. யோத்தாஸை நாக்-அவுட் செய்தனர். அதோடு, கபடி லீக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள்ளும் அடியெடுத்து வைத்தனர்.

'எப்படை வரினும் இப்படை வெல்லும்' எனும் சொற்றொடருக்கு ஏற்ப, எத்தனை சாம்பியன் வீரர்களை கைவசம் வைத்திருந்தாலும், அவர்கள் இல்லாமலும் இப்படியொரு தொடரில், இப்படியொரு இடத்திற்கு முன்னேற முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் வெளிப்படுத்தவும் உள்ளனர். அவர்களின் நேற்றைய தின வெற்றி எந்தவொரு கபடி ரசிகரின் நினைவில் இருந்தும் நீக்க முடியாத, எவராலும் மறக்க முடியாத வெற்றியாக அமைந்துபோனது.

அரையிறுதி ஆட்டங்கள்:

நேற்று நடந்த முதலாவது பிளே-ஆப் ஆட்டத்தில் பெங்களூரு அணி, 56-24 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால், அந்த அணி நாளை இரவு நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதேபோல், உ.பி. யோத்தாசை சாய்த்த தமிழ் தலைவாஸ் நாளை இரவு நடக்கும் 2வது அரையிறுதியில் புனேரி பால்டன் அணியுடன் மல்லுக்கட்டுகிறது.

இதையும் படியுங்கள்: ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட வங்கதேச கோச்: இவ்ளோ பெருந்தன்மையா?

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Pro Kabaddi Tamil Thalaivas Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment