பிரிஜ் பூஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்களில் முக்கிய சாட்சியான மல்யுத்த வீராங்கனை அனித ஷியோரன், இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறுகிறது. 2010ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெத் போட்டிகளில் தங்கம் வென்ற அனிதா, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அனித வெற்றிபெற்றால், ஆண்கள் மட்டுமே பதவி வகித்து வந்த இந்திய விளையாட்டு வரலாற்றில், இவர்தான் முதல் பெண்ணாக இருப்பார். இந்நிலையில் இந்திய பெண்கள் சர்வதேச அளவில் முக்கிய சாதனைகளை படைத்துள்ளனர். ஆனால் முடிவுகளை எடுப்பவர்கள் எப்போதும் ஆண்களாகவே இருகின்றனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள 50 வாக்களர் பட்டியல் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலில் அனிதா மட்டுமே ஒரே பெண் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இவருக்கு எதிராக பிரிஜ் பூஷன் சார்பில் ஜெய் பிரகாஷ், சஞ்ஜை சிங் போலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இருவரும் பிரிஜ் பூஷனுடன் பல வருடங்களாக நெருங்கிய தொடர்பில் உள்ளனர். மேலும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக 6 பெண் மல்யுத்த வீரர்கள் புகார் கொடுத்துள்ளனர். இவர் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இவருக்கு நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் கூறுகையில் 20 முதல் 25 மாநில மல்யுத்த சங்கங்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஜெய் பிரகாஷ் கூறுகையில், “ நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்த சில நாட்களில் யார் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்பதை முடிவு செய்வோம். எங்கள் முடிவு ஒரு மனதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்த அனிதாவிற்கு, போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் துணையாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அனித சார்பாக பொதுச் செயலாளர் பதவிக்கு பிரேம் சந்த்லோசாப் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். துணை தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் மல்யுத்த வீரர் துஷ்யந்த் ஷர்மா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மூத்த துணைத் தலைவர் பதவிக்கு ஹரியானாவைச் சேர்ந்த தேவேந்தர் காடியன் போட்டியிட உள்ளார்.
பிரிஜ் பூஷன் சார்பில், பொதுச் செயலாளர் பதவிக்கு தர்ஷன் லால் என்பவரும், பொருளாளர் பதவிக்கு சத்தியபால் சிங் தேஷ்வல் போட்டியிட உள்ளனர். மூத்த துணை தலைவர் பதவிக்கு சித் குமார் சாஷா போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் பிரிஜ் பூஷன் மகன் கரண் பிரதாப், மருமகன் விஷால் சிங் இருவரும் மாநில மல்யுத்த சங்கங்களின் முக்கிய பொறுப்பில் இருந்தபோதும் கூட அவர்கள் இத்தேர்தலில் போட்டியிட வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“