மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய அணி கடைசிப்பந்தில் திரில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையே கால் இறுதிப் போட்டி மெல்போர்ன் நகரில் உள்ள ஜங்க்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ்வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கணை மந்தனா 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால், 16 வயதே ஆன வீராங்கணை ஷஃபாலி வழக்கம் போல அதிரடியாக விளையாடினார்.
இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், போகப்போக விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தன. ஷஃபாலி 34 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தானியா பாட்டியா 23, ரோட்ரிகஸ் 10, கௌர் 1, வேதா கிருஷ்ணமூர்த்தி 6, தீப்தி சர்மா 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ராதா யாதவ் 14 ரன்கள் எடுத்த நிலையில் கடைசிப் பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி வீராங்கணைகள் களம் இறங்கினர்.
யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது வீடியோ:
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுவிடும் என்பதால் இந்திய வீரங்கணைகள் தீவிரமாக களம் இறங்கினர்.
நியூஸிலாந்து அணியில் தொடக்க வீராங்கணைகளாக பேட் செய்த ரேச்சல் பிரிஸ்ட் 12 ரன்களிலும் கேப்டன் சோஃபி டிவைன் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
நியூஸிலாந்து அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து திணறிய நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேடி கிரீனும் கேடி மார்டினும் நிதானமாக விளையாடியதால் ஆட்டத்தின் போக்கு மாறியது. நியூஸிலாந்து அணி ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், மேடி கிரீன் 24 ரன்களிலும் கேடி மார்டின் 25 ரன்களிலும் ஆட்டம் இந்தனர்.
19வது ஓவரில் நியூஸிலாந்து அனி 12 பந்துகளில் 34 ரன்கள் வெற்றி பெற தேவை என்ற நிலையில், 1 பூணம் யாதவின் 19வது ஓவரில் அமெலியா கெர் 3 பவுண்டரிகளை விளாசி 18 ரன்கள் எடுத்தர். இதனால், கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி இலக்கை அடைவதற்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த நியூஸிலாந்து அணி கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த அணியின் ஜென்சன் ரன் அவுட் ஆனார். இறுதியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால், இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”